பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். அக்காலத்துப் பலிசை நூற்றுக்குப்பன்னிரண்டுக்குக் குறையாம லிருந்தது. சிற்சில சமயங்களில், பதினைந்தாகவும் காண்கிறோம். பலவகையாகவும் எழுதப்படும் பத்திரங்களை (ஆவணங்களை) காப்பிட (Registration) களரிகளும் (சபைகளும்) அக்காலத்து ஊர்கள்தோறு மிருந்தன. பத்திரம் அடியில் வருமாறு எழுதி ஆவணக்களரிக்குக் காட்டி அவர்கள் காப்புப்பெறுவார்கள். “இந்நான்கெல்கைக்குட்பட்ட தரமிலிமிகுதிக் குறைவுபட்ட குழி சுன. இக்குழி அறுநூற்றுக்கு எம்மிலிசைந்த விலைப்பொருள் அன்றாடு நற்காசு 20 இப்படி இருபதும் ஆவணக்களரியேகாட்டிக்காப்பிட்டு கைச்செலவறக்கொண்டு விற்று விலைப் பிரமாணஞ் செய்துகொண்டு, மண்ணறவிற்றுப் பொருளறக்கொண் டோம். இக்கழி அறுநூற்றுக்கும் விலைப்படி பணம் இருபதுமே விலையாவதாகவும், இதுவல்லது வேறுபொருள் பாவறுதி, பொருட் செலவாலை காட்டக்கடவதல்லவாகவும்."* இப்பத்திரத்தை பெடுத்துக் கொண்டு, விற்றவனும், வாங்கினவனும் ஆவணக்களரிக்குச் சென்று அவர்கள் முன்பு தாம் இசைந்த விலைத்தொகையும், நிலவிஸ்தீரண முஞ் சொல்லி, இருவரும் ஒப்புக்கொண்டோமென்று உறுதிமொழிகொடுத்த பின், களரியாராற் காப்பிடப்பெற்றுத் திரும்புவார்கள். இச்சாஸனம் உத்தரோத்தாம் வேண்டியதாயின் அவ்வூர்க்கோயிற் சுவரில் வெட்டுவது வழக்கம். இவ்வாறு வெட்டுவதனாற் பிற்காலத்தார், சாஸனப்படி கட் டளைகள் நடக்கின்றனவாவென்று வினவ ஆதாரமாகும். அதனை உத் தேசித்துத்தான் கல்வெட்டுப்பொறிப்பது வழக்கமாயிற்று. இதற் காகவே கல்வெட்டுக்கள், வெளிச்சமுள்ளவிடத்தும், யாவரும் எளிதில் வாசிக்கக்கூடியவிடத்திலுமே எழுதியிருக்கக் காணலாம். சோழராஜாக்கள் யானைப்படையும், குதிரைப்படையும், காலாட் படையும் மிகுதியாக வைத்துப் பரிபாலித்து வந்தனர். இவர்கள் தேர்ப்படை யுபயோகித்ததாகத் தெரியவில்லை. அக்காலத்து வழங்கிய ஆயுதங்கள் நடி, வில், வேல், வாள், அம்பு இவைகளே. மூன்றாம் குலோத்துங்கன் காலத்துச் சாஸனமொன்றில் "எரிமருந்தன் அரச • திருப்புகலூர்,