பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். நாராயணன்" என்னும் பெயர் வருவதால் வெடிமருந்து அவ்வரசன் காலத்தே உபயோகிக்கப்பட்டதுபோலு மென்று சங்கிக்கவேண்டி யிருக்கிறது. படைத்தலைவர்கட்கு மகாசாமந்தன், ஸேநாதிபதி, சாமந்தன், தண்டநாயகன் எனப் பலபெயர்கள் வழங்கிவந்தன. மகாசாமந்தன் என்பவன் எல்லாப்படைகட்குந் தலைவன். சிறுசிறுபடைகளைத் தண்ட நாயகர், சாமந்தர் என்போர் ஆளுவார் போலும். ஒவ்வொரு படைப் பிரிவுக்கும் வெவ்வேறு பெயர்களிடப்பட்டிருந்தன. உதாரணம்;ராஜராஜத் தெரிந்தவலங்கை வேளைக்காரர்கள், 1 பராந்தக கொங்க வாளர், 1 நிகரிலி சோழத் தெரிந்த உடநிலைக் குதிரைச்சேவகர், $ சிறுதனத்து வடுகக்காவலர், 1 மும்முடிசோழத்தெரிந்த ஆனைப்பாகர் $ என்பன. மேற்கூறிய உடனிலைக்குதிரைச்சேவகர்கள் || என்னும் தொடரால், அரசனுடன் கூடவே எப்போதும் ஒரு குதிரைப்படை யிருந்திருக்கவேண்டுமென்று தோற்றுகிறது. (1) படையாளர்கள் போ ரில்லாக் காலங்களிற் பயிர்த்தொழில்கள் முதலிய செய்துகொண்டு இருப்பது வழக்கம். வென்றுகொண்ட நாடுகளில், அவைகளுக்காக நிலைப்படைகள் (2) எனச் சில தானைகள் நிறுத்தப்பட்டிருக்கும். "கோட்டாற்று நிலைப்படை” என்பதிற் கண்டுகொள்க. இவைகளன்றிச் சோழர்கள் பல பெருத்த கப்பற்சைந்தியங்களும் உடையராயிருந்தனர். இராஜேந்திர சோழன் காலத்தே கடாரஞ் செற்றதும், மற்றச் சோழச்சக்கரவர்த்திகள் ஆழ்கடலீழத்தைப் பல் காலும் வென்றுகொண்டதும், இவற்றைக்கொண்டேயாதலால் இவ்வமி சத்தரசர்கள் நீர்மேலும் நிலமேலும் போர் செய்வதில் மிகப் பெயர் பெற்றவர்களாவர். பிறதேசத்தரசரும் இவர்களைக் குறிக்குங்கால் வெகு

  • மேல்சேவூர். t S. I. I Vol. II. p. 274.

| Ibid. * I bid. 1 I bid. 8 I bid p. 275. ii நாகர்கோயிற்பக்கத்துள்ள சோனபுரத்துச் சோளேசுவான் கோயிற் " சாஸனம். 1 Body guards. % Armies stationed at stratagatio polnts, 10