________________
சோழங்கிசளித்திரச்சுருக்கம். பராக்கிரமசாலிகளான படைவீரரையுடைய சோழர்கள் என்றே கூறு கின்றார்கள். இவ்விருவகைச்சேனாபலமுமில்லாதிருப்பின், வடக்கே கங்கை, கிழக்கே கடாரம், தெற்கே ஈழம், மேற்கே சமுத்திரம் வரை இராஜேந்திரசோழன் எவ்வாறு வெல்லுதல் கூடும்? அக்காலத்து ஒருகாட்டாசன் பிறநாட்டரசன் மீது படையெடுத் துச் சென்று அவனை முறியடித்து அவன் நாட்டைக்கொண்டபின், அவனைப் பலவகையாக நடத்துவது வழக்கம். தன்னால் வெல்லப் பட்ட பகைவனாட்டை அவனுக்கே கொடுத்து அவனைத் தன்னுளடங் கிய ஒரு சிற்றரசனாக்கிக்கொள்ளுவதும், சிற்சில சமயங்களில் தன் மக்களை அவன் குடும்பத்திற் கொடுத்தாயினும், அவன் மக்களைத் தன் குடும்பத்திற் கொண்டாயினும், உறவு கொண்டு மீளுவதுமுண்டு. அன்றி, அவனைக்காட்டிற்புகத்துரத்தி அந்தாட்டுக்கு ஒரு பிரதிநிதியை நியமித்து வருதலமுண்டு; தவறினால் அவனை யானைக்காலாலிடறு வித்தும், தலையைக்கொய்தும் கொல்லுவது ஒரு வழி. நாடுஜயிக்கப்பட்டுத் தம் கைவசப்பட்டதும், தோல்வியடைந்த அரசனது பெண்டு, பண்டாரம், விருது, யானை, குதிரை முதலிய வற்றைப் பற்றிக்கொண்டு, ஊர்களிலநேகத்தைச் சுட்டும், அரமனைகளை இடித்தும் பயிர்களையழித்தும் பற்பல கொடுமைகளைச்செய்து, அவ் வேற்றரசன் நாட்டில், தன் வெற்றி குறிக்கும் ஜயஸ்தம்பமொன்றை நாட்டித்திரும்புவார்கள். இவ்வளவு பாடுபட்டுச் சயித்தும் அவர்கள் அந்நாட்டைத் தம்வசம் வைத்துக்கொள்ள விரும்பினவர்களாகத்தோற்ற வில்லை. ஏனெனில், ஜயித்த நாட்டைத் தோல்வியடைந்தவன்கையிற் கொடுத்து மீண்டால், அவன் தன் எதிரியின் வலிகுன்றும்வரையும் திறைகட்டி வந்து, வென்றவன் தளர்வடைந்த காலத்தாயினும், அவ னிறந்த பின்னாயினும், கப்பங்கட்ட மறுத்து முடிவிற் சுவாதீன மடைந்து விடுகிறான். இதனாற்றான் ஒவ்வோர் அரசன் காலத்தும், ஈழம் வேங்கை முதலிய நாடுகள் தனித்தனி படையெடுத்து வெல்ல வேண்டி நேர்ந்தது. இவ்வுப்போகமற்ற வழியை நீக்கிவிட்டுத் தன்கைவசமே நாடுகளை வைத்துக்கொள்ள முயன்றவன் குலோத்துங்கன் (1). இதுபற்றியே தன்மக்களுள் ஒருவளைத் தான் அடிப்படுத்தின நாடுகட்குப் பிரதிநிதி