பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். யாக்கி வந்தான். கோட்டாறு விழிஞம் முதலிய முக்கியமான விடங் களிலும் நிலைப்படைகளை வைத்து, பாண்டியரும் கோளரும் தலையெடுக் காமற் பாதுகாத்து வந்தான். இவன் காலத்துத்தான் சோணாடு மிகவிரிவும், பின்னுக்கு நிலைபேறு மடைந்தது. யுத்தத்தில் ஊர்களையழிக்கும்போது கோயில் குளங்களைத் தொடு வதில்லை. சிற்சில சமயங்களில் அவையும் அழிபடுவதுண்டு. தோல்வி யடைந்த அரசனாயினும் அவன் முன்னோர்களாயினும் செய்திருக்கும் தர்மங்களுக்கும் விகாதம் செய்வதில்லை. சோழச்சக்கரவர்த்திகளுக்குட்பட்டுச் சிற்றரசர் பலரிருந்தனர் என்று பலமுறையும் மேலே கூறியிருக்கிறோம். இவர்கள் அரசனுக்குக் கப்பம் கட்டுவதும், அவனுக்கு வேண்டிய சேனைகளைச் சேகரித்துக் கொடுப்பதும், மற்றும் அவனுக்கு எவ்வகையும் உபகாரஞ்செய்ய வேண்டியதொன்று தவிர, தந்நாட்டை எல்லாவழியாலும் சுயேச்சையாக ஆண்டுவரலாம். இவர்களும் தம் சக்கரவர்த்தியிடத்தில் மிக்க மரியாதை யோடும் அன்போடுமிருந்தார்கள் என்பதிலும் சந்தேகமில்லை. இவ்வமிசத்திற்பட்டம்பெறுவது ஜேஷ்டானுக்கிரமமாகத்தான். அரசர்களும் அவர்களைச்சார்ந்த உறவினரும் அகத்தில் ஒற்றி, காரி, கிள்ளி, இருக்குவேள், என்பனபோன்ற பழந்தமிழ்ப்பெயர் தரித்திருத் தல் வழக்கம். ஆயின் உத்தியோகமுறைமையில் பராந்தகன, இராஜ ராஜன், இராஜாதித்தன் என்னும் வடமொழிப்பெயர்களைத் தரிப்பார் கள். அரசனிறந்தால், அவன் பாரியைகளிற் சிலர் சக்கமனஞ் செய்வ துண்டு. போரில் மடிந்த வீரர்கட்கும், நிரை மீட்சி, வேட்டை முதலிய வைகளில் இறந்தவீரர்கட்கும் அரசனாலாயினும் இறந்தவன் பந்துக் களாலாயினும், அவர்களுடைய ஞாபகச்சின்னமாக அவர்களைப்போல உருச்சமைத்துக் கல்லொன்று நடுவது வழக்கம். பண்டைக்காலத்தே தமிழைப் பாண்டியர் பரிபாலித்து வந்தன ரென்று சொல்லுவது இலக்கியத்தின்வழி. சோழர்கள் தாமேமிக்க கல்விமான்களாயிருந்ததோடு, கற்றோர்களை ஆதரித்தும் வந்தார்கள். " செந்தமிழ்த் தொகுதி. 3. பக்கம் 55.