பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அக அனுபந்தம் I. அருண்மொழித்தேவர்:- சிவபாதசேகரன், ராஜாசிரயன், க்ஷத் திரயசிகாமணி, மும்முடிசோழன், இராஜராஜதேவர் I. சோழசக்கர வர்த்திகளில் ஒப்பில்லாதவர் என்று புகழ்படைத்தவர்: பராந்தகன் (11)-ன் குமாரர். இவர் தமையன், ஆதித்தன் (II). இவர் மனைவியர், தந்திசத்திவிடங்கியார், திரைலோக்கியமாதேவியார், பஞ்சவன மாதேவி யார், அபிமானவல்லி, சோழமாதேவியார்; இவர் குமாரன், இராஜேந்திர சோழதேவன் I. இவர் பட்டந்தரித்தது கி. பி. 985. இவரால் ஜயிக்கப்பட்டவரசர்கள், அமரபுஜங்கபாண்டியன், கங்கநாட்டரசன், நுளம்பபாடி, வேங்கைநாடு, குடகு, இந்நாட்டதிபதிகள் முதலியோர். இவர் திருவிசலூரில் துலாபார மபுக்கார். இவர் பெண்கள் கீழ்நாட்டுச் சாளுக்கிய விமலாதித்தன் மனைவியார் குந்தவ்வையார் II) மாதேவடி களும், மற்றொருத்தியும்; தஞ்சாவூர் பிரஹதீசுவரன் கோயில் கட்டினவர் இவரே. இவர் 27-வருஷம் இராச்சியபாரம் தாங்கினார். ஆதித்தன் |-- விஜயாலயன் மகன். சோழர்களில் பிரக்கியாதி பெற்றோர்களில் முதல்வன். பல்லவசார்வபௌமத்தைத் தொலைத்து, சோழ அரசாட்சியை நிலை நிறுத்தினவன. இவன் காலத்தானும் இவனுக்கு அநுகுணமாயுமிருந்தவன் வாகுணபாண்டின். இவனால் ஜயிக்கப்பெற்றவன் திருபதுங்கபல்லவன. ஆஹவமல்லன்:- மேல்நாட்டுச் சாளுக்கியன் (குந்தளன்). சோழ இராஜாதிராஜன் (I) இராஜமஹேந்திரன், வீரராஜேந்திரன், இம்மூவர்க் கும் எதிரி. இவன் மக்கள் விக்கி யெனனப்பட்ட விக்கிரமாதித்தன். (கி. பி. 1056-1076; 1126), விஷ்ணுவர்த்த ன விஜயாதித்தன் (கி. பி. 1064-1074). இவன் சோழர்களால் கம்பிலி, கொப்பம் முதலிய விடங்களில் தோல்வியுற்றான். இவன் காலம் (கி. பி. 10441068). இராஜமஹேந்திர வர்ம்மன்:-- இராஜேந்திர தேவன் (விஜய -) வின் மகன். சிறிது காலம் அரசாண்டவன். இராஜராஜதேவர் I:-அருண்மொழித்தேவர் என்னும் பெயரி டிையிற் பார்க்க.