பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அஉ அனுபந்தம் 1. ஷ II. குலோத்துங்கன் (IIன்) மகன். இராஜராஜனுலாவின் நாயகன். ஷ III. குலோத்துங்கன் (IIIன்) மகன். (கி. பி.) 1216ல் பட் டந்தரித்தான். இவன் இருமுறை தன்னிராஜ்ஜியத்தை யிழந்தான். முதல் முறை பாண்டியவாசன் மாறவர்ம்மன் சுந்தரபாண்டியனாலும், இரண்டாம் தடவை கோப்பெருஞ்சிங்கதேவன் என்பவனாலும் இந் நிகழ்ச்சிகளுண்டாயின. இவன் போசளன் வீசநாரசிங்கதேவன் மாப் பிள்ளை . ஆதலால் இருமுறையும் இவனால் உதவிபுரியப் பெற்றான். (கி. பி. 1246) வரையாண்டான். இராஜாதித்ததேவன்:-பராந்தகன் (1ன்) முதல் மகன். இரட்ட கன்னர தேவன்மேல் படையெடுத்துச்சென்று தக்கோலத்தில் (கி.பி. 949-ல்) போர் புரிந்து அவனைத் தோற்கடித்தான்; அன்றிரவே பூதுகன் என்னும் கங்கவரசன் சூழ்ச்சியாற் கொல்லப்பட்டான். இராஜாதிராஜன் I:-(கி. பி. 1018-ல்) பட்டந்தரித்தும், (கி. பி. 1028) முதல் தான் சுயாதிகாரத்தோடு அரசாண்டான். அதுவரை இளவாசாய் இராஜேந்திர சோழன் (மீன்) கீழ் அரசு புரிந்து வந்தான். இவன் எதிரிகள், மானாபாணன், வீரசோழன், சுந்தரபாண்டியன் என்னும் பாண்டியர் மூவர்; ஆஹவமல்லன், விக்கி, விஜயாதித்தன் ஆகிய மூவர் இரட்டர்கள்; விக்கிரமபாஹு, விக்கிரமபாண்டியன், வீரசலாமேகன், ஸ்ரீவல்லப மதனராஜன் என்னும் சிங்களவரசர்கள் இவனுக்கு ஜயங்கொண்ட சோழனென்னும் மறுபெயரொன்றுண்டு. இவன் (கி.பி. 1052) வரை யரசாண்டான். இராஜாதிராஜன் II:- இவன் காலத்துப் பாண்டிய நாட்டில் பட்டாபிஷேகத்தைக் குறித்த விவாதம் நேர, இவன், ஒருதரத்தானாகிய குலசேகர்பாண்டியனுக்கு உதவி புரிந்து மற்றவனாகிய வீரபாண்டியனைத் துரத்திவிட்டான். இராஜேந்திரசோழதேவன் I:- இராஜராஜதேவர் (1ன்) மகன். கங்கைகொண்டசோழன் , பண்டிதசோழன், உத்தமசோழன் (II) மது ராந்தகன், விக்கிரமசோழன், முடிகொண்டசோழனென்னும் பலபெயர் களையுடையவன். இவனோர் மகாபராக்கிரமசாலி. இவன் காலத்து