பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

________________

90) வளவர் கோன் அதன் பின்னர் அவர்க்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு, வேறு சில அமைச்சரையும் நாடு காவலரையும் படைத் தலைவரையும் அழைப்பித்துத் தமிழகத்தின் காவலுக்கு வேண்டுவன ஆலோசித்து முடிவு செய்தான்; பிடர்த் தலையார் சொல்லிய வண்ணம் அரசப் பொறுப்பினரை அமைத்தான்; காலக் கணக்க ரால் நன்னாள் ஒன்று தீர்மானித்துக்கொண்டான்; அந் நாளிலே தேவாலயங்களிலெல்லாம் விசேஷ பூஜைகள் செய்வித்துப் பிரசாதம் பெற்று, நன் முகூர்த்தத்திலே குடையும் கொடியும் முன்செல்லப் படைஞர் பல்லாயிரர் திரண்டு அணியணியாய்த் தொடர்ந்து செல்ல, முன்ன னுப்பிப் பிறகு தானும் புறப்பட்டான். தமிழ் நாட்டுள் வாழும் மக்களனைவரும், அன்று தம் அரசன் பாரத பூமி முழுவதையும் ஒரு குடைக்கீழ்க் கொணர்ந்து, அந்நாட்டில் எங்கும் புலிக் கொடியே பறக் கச் செய்வதற்காகப் புண்ணிய திசையாகிய வடதிசை நோக்கிப் புறப்பட்டதை யறிந்து, தாமும் அவனுக்குத் துணை வருவதாய்க் கூறி, அவன் பின்றொடர்ந்தனர். சேர நாட்டுப் படைகளிற் பெரும்பகுதியும் பாண்டியர் படைஞரிற் பெரும்பாலோரும் பின் சென்றனர். நக ரனைத்தும் பல வகை மங்கலக் குறிகள் தோன்றின. வலி படைத்த ஆடவர் பலரும் படைஞராய்ச் சென்றதால், நகரம் மக்கள் இல்லாதது போன்று தோன்றியது. சான் றோர் பலர் அரசனைப் பின் பற்றி வந்தனர். புலவர் புக ழப் புறப்பட்ட அப்புரவலன், நல்லோர் பலரையும் நாட்டகத்தே அமைதியாய் வாழ்ந்து வருமாறு வேண் டிக்கொண்டு விடை கொடுத்து, வட திசை சென்றான்.