பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

________________

91 வேளிர் பலர் படைகளும் சேர்ந்துகொண்டன. அந்நா ளில் அம்மன்னனோடு சென்ற கரி பரிதேர் காலாட்களின் தொகை பாரதப் போரிலே கௌரவர் பக்கம் திரண்ட படைக்கு நிகராம் என அங்கிருந்தார் கூறினர். களிற்றரசின்மீது முரசம் முழங்கப் புறப்பட்ட அப்பெரும்படையைத் தமிழகத்தின் அயலில் உள்ள தென்னாட்டு மன்னர் கண்டனர்; தாம் தனித்தனியே நின்று எதிர்த்தல் அறிவுடைமை (பாகாது என்று எண் ணினர். ஒன்பது குடை மன்னர் ஒருங்கு சேர்ந்தனர்; தம் படைகளை ஒன்றாய்த் திரட்டித் தமிழகத்தின் வட வெல்லையில் உள்ள வாகைப் பறந்தலை யென்ற பெரும் போர்க்களத்தில் வந்துற்றனர். அன்னவர் வருகையை அறிந்த கரிகாலன் அங்கு விரைந்து சென்றான். பெரும் படைகள் இரண்டும் கை கலந்தன. இரண்டு நாட்கள் போர் நிகழ்ந்தது. இறுதியில் அம்மன்னர் ஒன்பதின் மரும் தம் குடையும் கொடியும் இழந்து புறங்கொடுத்துக் காட்டுள் ஒளித்தனர். அவர்தம் படைஞருள் எஞ்சி யிருந்தோர் சோழனை வணங்கி அவனிடம் பணி செய்வ தாகக் கூறி உய்ந்தனர். இவ்வுண்மையை அறிந்த பிற மன்னர். ஒவ்வொருவரும் கரிகாலன் படைக் கடலிலே தத்தம் படைகளாகிய சிற்றாறுகளைக் கலக்குமாறு செய்து, தாமும் வட நாட்டுப் போர்க்கு வருவதாய்ப் புறப்பட்டனர். அவ்வாறு வளர்ந்துகொண்டே விந்திய பர்வதத் துக்கருகில் நெருங்கும் போது சோழ நாட்டுப் படை பல திறப் படைஞரையும் உடையதாய்ப் பெரியதொரு நாடே நகர்ந்து போவது போலப் போய்க்கொண் டிருந்தது. அப்