பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

________________

92 பக்கத்திலிருந்த அரசர் பலரும் ஒற்றராலும் தூ தராலும் இச்செய்திபை முன்னரேய்றிந்து, தென்றிசையிலிருந்து வரும் தமிழ் மன்னன் ஒருவனுக்குத் தாம் தலை வணங்க லாகாது என எண்ணி, ஒருங்கு திரண்டு, போர் எதிர்ந்த னர். சில நாட்கள் நிகழ்ந்த போரிலே எதிர்த்து வந்த அரசரிற் பெரும்பான்மையோர் தம் முடியும் குடியும் அழிந்து ஒழிந்தனர். படைஞர் வேறு வழியின்றி, வணங் கித் தமிழகப் படையொடு கலந்தனர். எஞ்சிய சில அர சர், பொன்னும் மணியும் பிற பொருள்களும் மலைபோலக் குவித்துத் திறையளந்து, தலை வணங்கி, உயிருய்ந்தனர். எதிர்ப்பார் எல்லாரும் இவ்வாறு தலையிறைஞ்சித் திறையளக்க அவற்றைப் பெற்றுக்கொண்டு, மேலும் மேலும் வளவன் வடதிசை நோக்கிச் சென்றான். அங்கங் குள்ள பல திற மன்னரும் தமிழ்ப் படைஞர்க்குச் செய்ய வுரிய உபசாரங்கள் செய்து, கரிகாற் பெருவளத்தான் முன்பு தலைவணங்கித் தம் முடியொடு சென்றனர். தான் எடுத்த காரியம் இவ்வாறு நன்கு நிறைவேறியதால், மன மகிழ்ந்த சோழர் குலத் தோன்றல் இமயவரையை அணு கினன் ; படைஞர் பலரோடு அம்மலையைக் கடந்து அப் பால் உள்ள நாட்டை அடைய எண்ணினன். தன் பெயர்க் குப் பொருந்தப் பனிக்கட்டி நிரம்பியிருந்த அப்பெரு மலை, தென்னாட்டிலே வாழ்ந்து பயின்ற படை வீரர்க்கு எளிதில் வழி விடாதாயிற்று. அது கண்டு, சோழர் பிரான், மேலும் வடக்கு நோக்கிச் செல்ல வொட்டாது தடுத்த அம்மலையைத் தண்டிக்கக் கருதியவன் போலத் தன் கையில் இருந்த செண்டால் அதன் சிகரத்தை அடித்து, உயர்ந்ததொரு நிலையில், அம்மலை தன்னாட்சிக்