பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

________________

93 கடங்கியதற்கு அறிகுறியாகப் புலிப் பொறி பொறித் தான். பிறகு அவன் நினைத்தது முற்றச் செய்த நிமலனைத் தொழுது, தென்னாடு நோக்கித் திரும்பினன். திரும்பு காலில் சோணை யாற்றங்கரையில் உள்ள வச்சிர நாட்டை யடைந்தான். அந்நாட்டு மன்னன் சோழனது பிரதா பத்தை முன்னமே செவியால் அளந்தறிந்தவனாகையால், விரைந்து வந்து, உபசரித்து, முத்துப் பந்தர் ஒன்றும் பிற பொருள்களும் கொடுத்துத் தமிழ் வேந்தன் நட்புப் பெற்றுக்கொண்டான். தமிழ்ப் படை அதன் பின்னர் மகத நாட்டை யடைந்தது. அந்நாட்டு மன்னன் போர்க்கு எதிர்த்து வந்தான். வடவரும் தென்னவரும் கை கலந்து நெடும்போர் புரிந்தனர். தெய்வ பலம் பெற்றி ருந்த சென்னியின் பக்கமே வெற்றித்திரு வந்துற்றனள். வட மகத நாட்டு மன்னன் தலை வணங்கித் தன்னகரத்தி லே அரும்பணி யியற்ற வல்ல தொழிலாளர்களாற் பொன்னும் மணியும் கொண்டு செய்வித்திருந்த பட்டி மண்டபம் ஒன்றையும் பிற அரும்பொருள்களையும் கொடுத்தான். சோழன் அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, அவந்தி நாடு அடைந்தான். அம்மன்னன் வட் நாட்டவர் பட்ட பாட்டை யெல்லாம் நன்கு கேட் டிருந்ததால், விரைந்து வந்து எதிர் கொண்டு, படை ஞர்க்கும் பிறர்க்கும் வேண்டிய உபசாரம் எல்லாம் செய்து, அரசர் பிரானாகிய கரிகாற் பெருவளத்தானை வணங்கி, முன்னின்று, தன் முன்னோர் கால முதல் தன் னாட்டுக்கு அழகு தந்து அமைந்திருந்ததும் பொன்னும் மணியும் பொருந்த அமைத்ததும் ஆகிய தோரண வாயில்