பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

________________

94 ஒன்றையும் பெரும்பொருள் பிறவற்றையும் கொடுத்துப் பதின் காதம் பின் வந்து வழி விட்டனுப்பினன். தமிழ் மறவர் தமிழ் நாடு நோக்கி வந்துகொண்டி ருந்தனர். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள புலவர் பற்பலர் வந்து, கரிகால் வளவனைப் புகழ்ந்து, பரிசில் பெற்றுச் சென்றனர். அரசர் பலரும் அரசர்க்கரசனென அவ னைப் பணிந்தனர். பாரத பூமியில் உள்ள நாடுகள் - அனைத்தும் அரசு ஒன்றின்கீழ் வந்ததால், அவ்வரசுக் குரிய அருந்தமிழ் மொழி எங்கும் தனியரசு செலுத்துவ தாயிற்று. சோழனும் அவன் பின் வந்த படைஞரும் தம் நாட்டினின்றகன்று சென்ற மூன்றாண்டுகளின் பிறகு திரும்பித் தம் நாட்டுள் வந்தனர். நாட்டவர் அனைவரும் பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும் பாவை விளக்கும் அலங்காரமாக வீதிக ளெங்கும் பரப்பி மாவிலைத் தோரணங்கள் கட்டி, வாழை கமுகு மரங்கள் நாட்டித் தம்மரசனை அன்போடு எதிர் கொண்டனர். அங்கு வந்தாருள் ஒரு புலவர், " உலகம் புகழ்ந்த வோங்குயர் விழுச்சீர் தமதெனக் கொண்ட தமிழ்ப்பழங் குடியில் முன்னையோர் புகழெலாந் தன்னையே யடையப் பிறந்தனை போரிற் சிறந்தனை யரசியல் நெறியினி லுயர்ந்தனை நினைத்தன முற்றுமாஉம் ஆற்றலு மமைந்தனை யரசெலாம் பணிய வடநாட் டமரினில் வாகை சூடிய களிமால் களிற்றிற் கரிகால் வளவ! மரபிசை வளர்க்குறூஉம் மைந்தரை யடைந்தனை