99
________________
99 கட் கொருமுறை அந்நாடுகளைப் பார்வையிட்டு வர வேண்டும். நம் நாட்டுப் படைஞரிற் சிறுசிறு தொகுதி யார் அந்நாடுகளில் நம் கொடிக்கு உரிய பெருமை ஓங்கி வளருமாறு காவலாயிருக்கவும் வேண்டும். இவை யனைத்தும் செய்தாலன்றி, நாம் இந்நாடுகளை வென்ற தால் ஆகும் பயனை அடைய இயலாது போம். இங்குள் ளார் அனைவரும் நான் கூறுவது பொருத்தம் எனவே அறிவர். அரசர் பிரான் வேண்டுவன செய்கவென்று வேண்டுகிறேன். வளவன்:- ஐய, நீவிர் கூறியவண்ண ம் வேண்டுவன செய்ய முதற்கண் பல நெடுஞ்சாலைகள் ' அமைத்தல் வேண்டியிருத்தலாலும், நம் படைஞரிற் பலர் இப்பொ ழுதே ஆங்காங்கு நிறுத்தப்பெற்றிருத்தலாலும், இயன்ற வளவு விரைவிலேயே தொடங்கி முடிப்போம். நம் நாட் டின் பெருமையைக் காப்பாற்ற இது மிகவும் அவசியம் என நாம் ஏற்றுக்கொள்கிறேம். பதுமனார் :- அரசர் பெருமானே, அறிஞர்களே, யான் நம் சோழ நாட்டகத்தே ஆகவேண்டிய சில செயல் களைப் பற்றிப் பேச விரும்புகிறேன். அமர முனிவன் அகத்தியன்றனாது கரகங்கவிழ்த்த காவிரிப்பாவை பாடல் சால் சிறப்பிற் பரதத் தோங்கிய கோடாச் செங்கோற் சோழர் தங் குலக்கொடி யாகையாற் புலவர் நாவிற் பொருந்திய அப்பூங்கொடியைப் பிறரெவரும் பொதுமை கொண் டாடா வண்ணம், நம் நாட்டுக்கும் பெரும்பயன் விளைக்கு மாறு பெருங்கரைகளுக்குள் அடங்கி ஒழுகச் செயல் வேண்டும். வெள்ளம் பெருகி வருங் காலங்களிலே காவிரியாறு மிகவும் வலியதாய், எவர்க்கும் அடங்காது,