பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

________________

கவுணியனார்:-அரசரேறே, பிடர்த்த லைப் பெரியீர், அன்பர்காள், யான் இப்பேரவைக்கண் தெரிவிக்க விரும் புவது ஒன்றுளது. அஃது அரசர் பிரான் விரைவிலே மேற்கொள்ளற்குரிய வினையாகும். நம்மாசர் வட நாடு சென்று, பல மன்னரையும் வென்று, இமயத்திற் புலி பொறித்த செய்தி நமக்கு மகிழ்ச்சி விளைப்பது மெய்யே. ஆனால், அதன் பயனாய் நம் நாட்டவர்க்கு விளைந்திருக் கும் பெரும்பொறுப்பையும் நாம் மறக்கக் கூடாது என்று கூற விரும்புகிறேன். வென்ற பல நாடுகட்கும் உரிய அரசுகளையும் நம்மிற் சில அதிகாரிகளையும் அமர்த் தல் வேண்டும். வென்ற நாடுகள் அரசும் முறையும் இழந்திருத்தல் நமக்கே இழிவு பயக்கும். இந்நாட்டி லிருந்து அந்நாடுகட்கு அடிக்கடி போய் வரும் பல பொறுப்பாளர்களும் ஏற்படல் வேண்டும். அங்கு அரசு பூண்பார் குடி மக்களுக்கு உரிய நலம் புரியும் முயற்சி களில் அற நெறிக்கு மாறாக நடப்பாராயின், அவர் செய லால் விளையும் பழி நம் அரசைச் சாரும். ஆகையால், வடநாட்டுப் போரால் நாம் அடைந்த புகழ் குறைபடா திருக்க வேண்டுமாயின், அந்நாடுகளை நன்கு ஆட்சி செய்ய வேண்டிய முயற்சிகளை நாமே செய்ய வேண்டும். நாம் அதிக தூரத்திலிருந்து எங்ஙனம் இப்பொறுப் பைத் தாங்குவது என்று இவர் எண்ணலாம். இமய முதற் குமரி வரை நம் அரசின் கீழ் அடங்குவதால், இந்நாட்டினுள் எவரும் எளிதிலே விரைவிலே போய் வரத் தக்கவாறு சாலைகளும் இடையிடையே சோலை களும் அறச்சாலைகளும் அமைத்தல் வேண்டும். அரசரே னும், அரசரது ஆணை பெற்றவரேனும், இரண்டாண்டு