பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

________________

97 னென்ன செய்யலாம் என்று ஆராய்ச்சி செய்யவே இவ் வகைக் களத்திலே கூடியுளோம். நாட்டின் நலங் கருதி உங்களால் தெரிவிக்கப்படுவது எதுவாயினும், முற்று விக்கச் சித்தமாயிருக்கிறோம். இரும்பிடர்த் தலையார்:- அரசர் பெருந்தகையே, "அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்.” எனப் பெரியார் அருளிச் செய்தது பொய்யா மொழி யன்றோ ? அரச பதவி பெற்றவன் தன் ஆட்சிக்குக் கீழ டங்கிய குடி மக்கள் தன்னை எளிதில் அடைந்து தமக்கு வேண்டுவனவற்றைத் தெரிவித்துக்கொள்ள இடந் தர வேண்டுவது அமைவே. அரசன் நாட்டின் பொருட்டு என்ன செய்யக் கருதினும், அறிஞராகிய பெரியாரது ஆதரவைப் பெற வேண்டுவது. அவசியமாம். அம்முறை கருதி இங்குள்ள பெரியாரெல்லாம், இன்று அழைக்கப் பெற்றது நலமே. இவருள் கவுணியனார், கவுதமனார், கீரனார், கண்ண னார், கௌசிகனார், சேந்தனார், நாகனார், பூதனார், புலியூர் கிழார் முதலிய பெரியோர் பலர் இங்கு வந்திருத்தல் இவ்வவைக் களத்துக்குச் சிறப்பளிக்கின் றது. இந்நல்லோர் உற்றார் அயலார், இன்னார் இனி யார், உயர்ந்தார் தாழ்ந்தார் என்ற வேறுபாடுகள் கரு தாது, உற்றதையே யுரைக்கும் உயர் குணம் படைத் தோராவர். இவரெல்லாம் கூற விரும்புவது எதுவாயி னும் அரசர் பெருமான் செவிசாய்த்து ஏற்றுக்கொண்டு ஆவன செய்தல் முறையென்றே கூறுவேன். பெரியீர் காள், இனி நும் முள்ளத்தில் உள்ளதை வெளியிட்டு உரைக்க வேண்டுகிறேன்.