உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

________________

IX நாடு நகரங்கள் அவற்றை ஆளும் அரசனது ஆற்றலுக்கு ஏற்ற வண்ணம் அமைந்திருக்கும். அரசு வல்லர சாய் இருக்குமாயின், நாடு நகரங்கள் செல்வங் கொழிக் கும். நாடு உருவத்தாற் பெரியதாயினும், அறிவறை போகிய அமைச்சரைத் துணைக்கொண்ட மெல்லியா னாகிய கிழவனால் ஆளப்படுமாயின், உயிரற்ற அழகிய உடம்பு போல இருக்கும். இவற்றை உணர்ந்த கரிகா லன் தன் நாடு பண்டைச் சோழநாட் டெல்லையினுள் அடங்காது பாரத பூமி முழுவதும் ஆகிய தால், தன் ஆட்சியின் சிறப்புக்குத் தக்கவாறு, நகரம் ஒன்று அமைக்க வேண்டும் என விரும்பினன்; ஒரு நாள் அரண் மனையில் அறிஞர் பலருடன் அமர்ந்து, அம்முயற்சிக் குத் தக்க ஆராய்ச்சி செய்யலாயினன். அமைச்சர் ஒரைவரும் புலவர் சிலரும் நாட்டு மக்களுள் முதியார் சிலரும் அங்கடைந்தனர். அவரவர் கொள்கைகளையும் வெளிப்படையாக அறிய விரும்பிய வளவர் பிரான், அவர்களோடு அளவளாவலாயினன். • கரிகாலன்:--ஐயன்மீர், யாம் இந்த நாட்டோடு அமையாமல், இறைவனருளால் இமய வரையளவுஞ் சென்று புலி பொறித்துப் பாரத நாடு முழுவதையும் ஆளப் பெற்றுக்கொண்டது நீவிர் அனைவரும் அறிந் ததே. இனி இந்நாட்டின் நலத்தின் பொருட்டு என்