உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101

________________

101 கவுதமனார்:-- சேர சோழ பாண்டிய மண்டலங் களே யன்றிப் பெரும்புகழ் படைத்த பேரரசுகள் பிற வற்றையும் அடக்கியாளும் அரசர் பெருமானே, நெடு நாளாகப் பாண்டிய நாட்டிலே நடை பெற்று வரும் தமிழ்ச் சங்கம் போன்று, இந்நாட்டிலும் நும் முன் னோர் பெயர் விளங்கச் 'சோழர் தமிழ்ச் சங்கம்' என்ற பெயரோடு ஒரு புலவ ரவைக்களம் நிறுவ வேண்டு கிறேன். புலவர் எண்ணிறந்தார் உள்ள இந்நாட்டிலே தமிழ்ச் சங்கம் இல்லாதிருப்பது, பெருங்குறையன்றோ? அக்குறையை நிவிர்த்திக்க ஆற்றலுள்ள அரசர் பிரான் நீரே யென்பதை யான் கூறவும் வேண்டுமோ? வளவன்:--எமக்கும் அது விருப்பமே. அங்கனமே செய்கின்றோம். புலவரை ஆதரியாத நாடு நாடெனப் படுமா? நம் நாட்டகத்தே உள்ள புலவர் பலரும் நம்மை அடிக்கடி காண வுதவுமாறு தமிழ்ச் சங்கம் நிறுவுவது எமது முதற் கடமையாம். கீரனார்:- மன்னர் மன்னரே, நமது அரசின் எல்லை அதிகமாயதற் கேற்ப, அரசிருக்கை நகரமும் பெரிதா யமைதல் வேண்டும். உறையூர் பெரிய நகரமே யாயினும், இன்னும் வளர்வதற்கு இடமில்லை. வேறு ஏதேனும் பழமையான நகரம் ஒன்றைப் புதுமையுறத் திருத்தி யமைத்து, அரசிருக்கை யாக்கிக்கொள்ள உம்மை யான் வேண்டுகிறேன். கௌசிகனார்:- அரசரே, உழவும் வாணிகமும் நாட்டு மக்களுக்கு இரு விழிகளாம். உழவினை வளர்க்கக் காவிரிக்குக் கரையும் அணையும் அமைக்க எற்றுக்கொண் டீர். வாணிகம், உள் நாட்டு வாணிகமும் கடற்றுறை