பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

________________

102 வாணிகமும் என இருவகையாம். உள்நாட்டு வாணிகம் நன்கு நடைபெற வேண்டின், நம் நாட்டு நகரங்கள் பல வற்றுக்கும் போக்கு வரவு . சௌகரியங்கள் ஏற்பட வேண்டும். சாலைகளிலே தீயார் மறைந்திருந்து வணிக ரைத் துன்புறுத்தா வகை காவற்படை நாடெங்கும் அமைதல் வேண்டும். கடற்றுறை வாணிகத்துக்கு உதவு மாறு துறைமுகப் பட்டினங்கள் சில அமைத்தல் வேண் டும். மரக்கலங்கள் பல அமைத்தலும் வேண்டும். இடை யிடையே கலங்கரை விளக்கங்கள் சில அமைக்க வேண் டும். இவை யெல்லாம் அமைத்த பிறகு கடற்றுறையில் உள்ள பெரிய பட்டினம் ஒன்றை அரசர் பிரான் உறையும் ளாகவும் செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு செய் யின், அயல் நாட்டவர் பலர் வரப்போகவும், வியாபாரம் பெருகவும், நம் நாட்டுச் செல்வம் வளரவும் இடம் உண் டாகும். சேந்தனார்:- அரசர் பெருமானே, இவ்விருவரும் கூறிய யோசனைக்கு உதவியாக யான் ஒன்று கூற விரும்பு கிறேன்: முன்னை நாளிலே சம்பாபதி யென்ற பெயர் பூண்டிருந்ததும் காவிரி யாறு கடலொடு கலக்கும் சங்க முகத் துறையில் உள்ளதுமாகிய புகார் என்னும் காவிரிப் பூம்பட்டினம் மிகவும் அகன்ற இடத்தை யுடையது; சோழர் குலத்தோடு தோன்றி வளர்ந்த தொன்மைப் புகழ் பூண்டது. அந்நகரை அரசிருக்கை யாக்கிக்கொள் ளின், எல்லா வகை நலமும் அங்குப் பொருத்தமுற அமையும். நம் நாட்டின் தற்கால நிலைக்கேற்ற பெருமை வாய்ந்த நகரம் அமைக்க அதுவே அமைவுடையதாம். வளவன்:-எம் எண்ணத்தில் இருப்பதும் அதுவே' யாகும்.