பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

________________

103 நாகனார்:- அரசர்க் கரசரே, அந்நகரம் புதிதாய் அமைக்கப்படும் பொழுது தற்கால நிலைக்கு வேண்டிய பல வகையான சௌகரியங்களும் அதன்கண் அமைக் கப்படல் வேண்டும். அன்றியும், வட நாட்டிலிருந்து நாம் பெற்று வந்துள்ள தோரணவாயிலும், பட்டி மண்ட பமும், முத்துப் பந்தரும், பிற அரும்பொருள்களும் அதன்கண் உரிய இடங்களில் அமைக்கப் பெறல் வேண்டும். வளவன்:- அங்ஙனமே செய்வோம். கண்ணனார்:- அரசர் பெருந்தகையே, அவ்வாறு அமைக்கப் பெறும் புது நகரத்திலே வான சாஸ்திர ஆராய்ச்சிச்சாலை யொன்று தமிழ்ச் சங்கத்துக்கு அடுத்து அமைக்க வேண்டுகிறேன். நம் நாட்டவர் வான நூலும் கணித நூலும் நன்கு பயில அது பேருதவியாய் இருக் கும். பூதனார்:- புண்ணியர் குடியிற் பிறந்த புரவலரே, பல நாடுகளையும் நாம் வென்று அடக்கியிருக்கின்றோ மாகையால், அவ்வந்நாட்டு மக்களும் நம் நாட்டை நாடு வார்கள். அவர்கள், தொழிற்றிறம் அனைத்தும் அந் நகரத்தே அமைதல் வேண்டும். புலியூர் கிழார்:- தமிழக மன்னரே, பூம்புகார் எனும் நகரத்தே புது நகரம் அமைக்கும் முயற்சி விரைவிலே தொடங்கப்படும் என்பது கேட்டு மிக்க மகிழ்வெய்து கிறேன். அதுபற்றி யான் கூற விரும்புவன சிலவுள : இப்பொழுது அம்.மூதூர் இருக்கும் நிலையை யான் அறி வேன்; இனி அதன்கண் இன்ன அமைவுகள் வேண் டும் எனக் கூற விழைகின்றேன். அந்நகரம் இப்பொழுது