பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

________________

104 பட்டினப் பாக்கம், மருவூர்ப் பாக்கம் என்ற இரு பகுதி களை யுடையதாய் இருக்கிறது. பட்டினப் பாக்கத்திலே பழமையான பல மாளிகைகளும், யவனர் வாழிடங் களும், வியாபாரத்தின் பொருட்டுக் கடல் வழியே அயல் நாடுகளிலிருந்து வந்த பிறர் வாழும் இடங்களும், வண் ணமும் சுண்ணமும் கலவையும் பூவும் புகையும் விரைப் பொருள்களும் விற்போர் வாழும் வீதிகளும், பட்டிலும் எலி மயிரிலும் பருத்தி நூலிலும் நுண்ணிழைகளால் ஆடை நெய்வோர் வாழும் இடங்களும், அகிலும் பவள மும் முத்தும் மணியும் பொன்னும் பிற பொருள்களும் அளவின்றி விற்கப்படும் கடைத் தெருக்களும், கடல் வீதியும், பிட்டும் அப்பமும் கள்ளும் மீனும் உப்பும் வெற்றிலையும் விற்பார் வாழும் தெருக்களும், வெண் கலக்காரரும் செம்பு கொட்டிகளும் மரத் தச்சரும் இரும்புக் கொல்லரும் சித்திரக்காரரும் சிற்பிகளும் பொற் கொல்லரும் இரத்தினப் பணிகாரரும் தையற்காரரும் பிறரும் வாழும் இடங்களும், நெட்டியினாலும் துணி யினாலும் பூவேலை செய்து தொழிற்றிறங் காட்டுவோரும் பிறரும் வாழும் இடங்களும், குழலினும் யாழினும் இசை பயின்ற பாணர் வாழிடங்களும், ஏவலர் வாழும் இடங்களும், பிறவும் சிறுகச் சிறுகக் கலப்புற்று அமைந் துள்ளன. இவற்றை அளவாலும் உருவத்தாலும் பெருக்கி, இன்னின்ன தொழிலாளர் இன்னின்ன இடங்களிலேதான் வாழ்தல் வேண்டும் என்று நியதி யமைத்து, நகரின் அழகை வளர்க்க வேண்டும். அயல் நாட்டுப் பொருள்களை வியாபாரம் செய்யும் கடைத் தெருக்கள் தனித்து ஓரிடத்திலும், உள் நாட்டுப்