உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

________________

1.05 பொருள்களை விற்கும் பெருங்கடைத் தெரு வேறோ ரிடத்திலும் ஒன்றோடொன்று கலவாமல் அமைய வேண் டும். பட்டினப் பாக்கத்திலே இராச வீதியும், தேரோடும் வீதியும், கடைத் தெருவும், வணிகர் வாழ் வீதியும், வேதியர் வீதியும், உழவரும் ஆயுள் வேதியரும் காலக் கணக்கரும் வாழும் வீதியும், முத்துக் கோப்போரும் சங்கறுப்போரும் சூதரும் மாகதரும் வேதாளிகரும் நாழிகை யளப்போரும் கூத்தரும் கூத்தியரும் பிறரும் வாழும் உறைவிடங்களும் உள்ள வீதியும், யானைப்பாக ரும் தேர்ப்பாகரும் வாழும் தெருக்களும், பிற அமைப் புக்களும் முன்பிருந்தவற்றைக்காட்டிலும் அகலமும் அழகும் அமைய அமைக்கப்பெற வேண்டும். அந்நகரத் திலே பழமையான பல வனங்கள் உள. அவற்றை நன்கு திருத்தி அமைத்தல் வேண்டும். தெய்வ நிலைகள் பல உள. அவையும் இருக்குமிடங்களில் அழகு மிகப் பெற வேண்டுவன செய்தல் வேண்டும். புதுமையான உவ வனங்களும் சிங்கார வனங்களும் அமைத்தல் நலமாம் என்றும் கூறுவேன். நகரமைத்தற்குரிய நூலாராய்ச்சி மிக்க அறிஞர் பலர் உதவி இம்முயற்சிக்கு வேண்டும் என்பது நான் கூறாமலே விளங்கும். வளவன் :- அங்ஙனமே செய்கின்றோம். அன்றி யும், மருவூர்ப் பாக்கத்துக்கும் பட்டினப் பாக்கத்துக்கும் இடையே பழமையாக அமைந்த நாளங்காடியைப் பெரிதாக்கி அமைத்து, நகரத்தினர்க்குப் பயன்படுத்த வும் கருதியுளோம். சேந்தனார்:-- முன்னே பல வித அழகுகள் அமைந் திருந்த அந்நகரத்தைப் புதுப்பிக்கும் முயற்சி சாலச்