106
________________
106 சிறந்ததே. ஆயினும், பண்டைப் பெருமையை விளக்கத் தக்க அறிகுறிகள் எவையேனும் இருப்பின், அவற்றை நிலை மாற்றி அழகழிக்காதிருக்க வேண்டுகின்றேன். அவற்றுள் யானறிந்த ஒன்றிரண்டை இங்கே கூறு கிறேன் : பண்டு தொட்டே பெருமை வாய்ந்த ஐவகை மன்றங்கள் அந்நகரில் உள. பட்டினத்திலே பிறர்" பொருளைக் கவர்வோர் உளராயின், அவர் வழி யறியாது மயங்க வைக்கும் வெள்ளிடை மன்றம் ஒன்று உண்டு. கூனரும் குருடரும் ஊமரும் செவிடரும் அழகு மெய் கொண்ட பெரும்பிணியாளரும் மூழ்கி நல்லுடம்பு பெற்றுச் செல்லும் பெருங்குளம் ஒன்றை யுடைய இலஞ்சி மன்றம் என்பது ஒன்று உண்டு. பிறரால் மருந்தூட்டப் பெற்றுப் பித்தேறினோரும், நஞ்சுண்டு நடுங்கு துயர் உற்றோரும் நாகங் கடிக்கப்பட்டோரும் பேய் கோட்பட்டோரும் வந்து வலஞ் செய்து தத்தம் துயர் நீங்கி மகிழ்ச்சி பெற்றுச் செல்லும் நெடுங்கல் நின்ற மன்றம் ஒன்று உண்டு. தவ வேடம் பூண்டு தவ நெறிக்குப் பொருந்தா வொழுக்க முடையோர், ஒழுக் கங் கெட்ட பெண்டிர், முறை மறந்த அமைச்சர், பிறர் மனை நயப்போர், பொய்க்கரி கூறுவோர், புறங்கூறும் புல்லியோர் என்ற இன்னவரை அறைந்துண்ணும் பூதம் நிற்கும் சதுக்கம் ஒன்று உளது. அரசனது செங் கோன்மை சிறிது தவறுமாயினும், அறங் கூறும் அவை யத்திலே ஓரம் பேசும் கருத்தோடு தருமாசனத்தார் தீர்ப்புக் கூறினும் இக்குற்றங்களைக் கண்டு பொறாது கண்ணீர் உகுத்து அழும் இயல்புடைய ஒரு தெய்விகப் பாவை நின்ற மன்றமும் உளது. இவற்றைப் பற்றிப்