113
________________
113 தோறும் ஓங்கி வளரப்பெற்று நுரையோடு புனல்பெருகி ஒன்றுக்கு ஆயிரமாக நெல்லை வளர்த்துக் கொடுக்கும் பெருமை படைத்தது காவிரியாறு எனவும், அவ்வாற் றின் வளத்தாற் காக்கப்பெறும் நாட்டின் மன்னராகை யால் வருவார்க்கு வரையாது வழங்குதல் நுமக்கு எளி தேயாம் எனவும் கூறினேன். அவைக்களப் புலவர் ஒருவர்:- ஐய, புலவர் பெரு மானே, பொருநர் இருந்த நிலையும் பரிசில் பெற்ற பின் ஆகிய அமைவும் கூற வேண்டுகிறேன். முடத்தாமக் கண்ணியார்:- அவர் வரும்போது அணிந்திருந்த வுடை, வேர்வையில் நனைந்து அழுக்கும் பாசியும் பிடித்திருந்தது; பல இடங்களில் தையல் அமைந்ததாய் இருந்தது. அரசர் பெருமான் அவர் வறு மை யகற்றப் பரிசில் தரா முன்னரே அவரது ஆடைக்கு வேற்றாடை கொடுத்தான். அது தூய வெள்ளிய பட் இடையெனவும் அழகிய கரையை உடையதெனவும் ஓரங் களில் முடிச்சுக்களை யுடையதெனவும் கூறினேன். 'அர சர் கொடுக்கும் கொடைச் சிறப்பை யானையும் கன்றும் விரும்பியவாறு கொள்கவென்று கூறித் தன்ன றியளவை யிற்றரத்தர, யானும் என்னறியளவையின் வேண்டுவ கொண்டு, இன்மை தீர வந்தனென்,' என்று கூறினேன். வளவன்:-- ஐய, புலவர் பெருமானே, நுமது பாட் டில் எம் நாட்டகத்தே ஐவகை நிலங்களும் அவற்றின் பொருள்களும் ஒன்றோடொன்று கலந்திருக்கும் அழகை நீவிர் இயற்கைநலந் தோன்றக் கூறியிருக்கும் பகுதி நன் றாய் இருக்ர து. முழுவதும் மதுரமயமான ஒரு பதார்த் தத்திலே இன்ன பகுதி நன்றாய் இருந்தது என்று எடுத்