பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

________________

114 துக் காட்ட இயலுமோ? நும் தகுதிக்கு இது போதிய தாகாதாயினும், யாம் தரும் இச்சிறு பொருளைப் பரிசி லாக ஏற்றுக்கொண்டு, இந்நாட்டிலேயே சிலகாலம் வாழ்ந் திருந்து பிறகு நும்மூர்க்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உண்டாம்போது வந்துகாண வேண்டுகிறோம். சோழர் தமிழ்ச் சங்கத்தே நும்மை அடிக்கடி காணலாம் என்று நம்புகிறோம். முடத்தாமக் கண்ணியார் அதன் பிறகு புலவரிட மும் புலவர் தலைவனாகிய கரிகாலனிடமும் விடை பெற் றுச் சென்றார். அவர் சோழ நாட்டின் இயற்கைச் செல்வத்தைப் புகார் நகரத்தே பலவகையான செயற்கை வளங்களோடு கண்டு மகிழ்ந்து, இன்புற்றுக் காலங் கழித்து வந்தார். இவ்வாறு இன்ப முறக் காலங் கழிந்து வருகையில் ஒரு நாள் கரிகாலன் காவிரியிற் புதுப் புனலில் ஆடும் விழாக் கொண்டாட விரும்பினன். 'நகரவ ரனைவரும் தத்தமக்கு விருப்பமான இடங்கட்குச் சென்று காவி ரிப் புதுப் புனல் ஆடி மகிழலாம்,' என்று முரசறைவித் தான். பிறகு தானும் தன் மக்களும் அத்தியுமாகப் புறப் பட்டுக் கழார் என்ற ஊர்க்கருகில் உள்ள காவிரிப் பெருந் துறை அடைந்தான். ஆதி மந்தியின் தலைவனாகிய அத்தி யென்பான் நீராட்டிலே மிக்க உற்சாக முடை யான்; நீந்தி மூழ்கி ஆடி விளையாடும் பயிற்சியும் உடை யான். அரசனுக்கு நெருங்கிய சுற்றத்தாரைத் தவிரப் பிறரெவரும் அத்துறைக்கு வரலாகாது என்று விளம் பரம் செய்யப் பெற்றிருந்ததால், ஞாயிறு எழு முன்னரே அரசனும் மக்களும் மருமகனும் நீராடப் புகுந்தனர்..