115
________________
115 பிறரெல்லாம் தம் மனம் திருப்தியடையும் வரையில் நீராடிக் கரையேறிப் பட்டுடுத்துத் திருநீறணிந்து கட வுளைத் தொழுது நின்றனர். கரையகத்திருந்த சிறிய தொரு மண்டபத்தே தனக்கென அமைத்த இருக்கை யிற் கரிகாலன் அமர்ந்திருந்தான். மக்களெல்லாம் அவ னைச் சூழ இருந்தனர். ஆதி மந்தியும் அருகிலே நின்றுகொண்டிருந்தனள். அவளது மனமும் கண்ணும் ஆற்றையே நாடி யிருந்தன. ஆற்றில் அத்தி இன்னும் ரோடி யிருந்தனன். அவன் நீருள் மூழ்கியும் வெளியில் மிதந்தும் நீந்தியும் குதித்தும் குடம் வைத்து ஆடியும் பல வகையில் விளை யாடினன். இப்புதுமையான ஆடல்களை யெல்லாம் கரி காலன் கண்டு மகிழ்ந்தான். மக்களும் கண்டு ஆனந்த மெய்தினர். ஆதி மந்தியோ, தன் கொழுநன் ஆடும் ஆடலிலே ஆபத்துண்டாகுமோ என்ற கவலையுடையளா யிருந்தனள். இவ்வாறு இருக்கையில் அத்தி முன்னே பல முறை மூழ்கியதுபோல நீருள் மூழ்கினன் ; ஒரு சுழியிற் சிக்கிக்கொண்டான்; தன் ஆற்றலை யெல்லாங் காட்டி வெளியேற முயன்றனன். அவன் முயற்சி பலிக்கவில்லை. அரசனும் மக்களும் இதுவும் ஒரு விளை யாட்டேர் என்று அதிசயத்தோடு பார்த்திருந்தனர். ஆதி மந்தியின் உள்ளம் கலங்கியது. சாதாரணமாக மனிதர் தண்ணீர்க்குள் அடங்கியிருக்கத் தக்க காலத் தைக்காட்டிலும் அதிகம் ஆகியதை அவள் கண்டாள்; உடனே ஆற்றை நெருங்கினாள். கரிகாலன் செய்வதறி யாது திகைத்தான். மக்களும் மயங்கினர். ஆதி மந்தி காவிரியாற்றை நோக்கிப் புலம்பலாயினள்: