உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

116 " அன்பு சிறந்தான் தமிழகத்தை யடையப் பிறந்தான் அத்தியென்பான் வன்பு சிறந்தான் வஞ்சிமன்னர் மரபு விளக்க வரும்பெரியான் இன்பு சிறந்தான் எழில்சிறந் தான் எனக்கே யுரியான் யாங்கொளித்தான் துன்பு சிறந்தேன் கலங்குகின்றேன் சொல்லாய் கொல்லோ காவேரி! கண்ணாய் அதன்கட் கருமணியாய்க் கருத்தாய்க் கருத்தி லுறுபொருளாய் விண்ணாய் உலகாய்க் கடவுளாய் விளங்கி யிருந்த விழுமியோன் பெண்ணாய் அவனுக் குரிமையாய்ப் பிறந்தே னினைய யாங்கொளித்தான் மண்ணாய் நீராய் வளர்தருவாய் வழங்காய் கொல்லோ காவேரி! மிடலாம் பெருமை மிகவுடையான் வேந்தர் நடுங்கு படையுடையான் மடலாம் பனையின் றாருடையான் மனத்தை யெனக்கே வழங்குவள்ளல் உடலாம் எனக்கிங் குயிராகி யுலவி னானை விழுங்கினையே! கடலாங் கொழுநன் றனைத் தழுவிக் களிப்பாய் கொல்லோ காவேரி!” அவள் இவ்வாறு புலம்பிக் கரைந்துருகிவிட்டுக் காவிரிக் கரை வழியே விரைந்தோடினள். கரிகாலனும் புனலாட்டுக்குப் இருந்த மனமகிழ்ச்சியை இழந்து, புகார் நகரம் நோக்கித் புறப்பட்டபோது