பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121

________________

121 டது. இங்கு மேகம் என்பதைச் செக்கர் மேகம் என்று கொண்டு செந்நிறமாய் இருக்கும் காவிரி நீரின் நிறத்துக்கு ஒப்பக் கூறுவது பொருத்தமாம். மற்றோர் உவமை, யாற்றுக்கும் கடலுக்கும் உள்ள பழமையான தொடர்பை விளக்குவதாம். கடல் தாய் எனவும் யாறு குழவி யென வும் கூறப்பட்டன. தாயைச் சிறிது பொழுது கூடப் பிரிந்திருக்கலாற்றாத குழவி, தாயின் மார்பகத்தே தழு விக் கிடத்தற்கு நிகராகக் காவிரி கடலொடு கலக்கும் இயல்பு எடுத்துரைக்கப்பட்டது. இங்குக் காவிரி வேக மாய் வந்து பாய்தலும் கடல் அலைக் கைகளால் அதனைத் தழுவிக்கொள்ளலும் தாய்க்கும் குழவிக்கும் இடையில் உள்ள அன்பென்னும் தொடர்பை விளக்க வுதவும். வளவன்:- புலவரேறே, இவ்வுவமைகள் மிகவும் நயம்பட அமைந்துள. இங்குள்ள புலவர்கள் எவையே னும் கேட்டறிய விரும்பிற் கேட்கலாம். உருத்திரங் கண்ண னார்:-- புலவர் கேட்டு அவர் மனமகிழும் வண்ணம் மறுமொழி கூறி யமைத்தல் என் போன்றார்க்கு இன்பம் தருவதே. புலமைப் புரவலரும் அவரால் ஆதரிக்கப்படும் புலவரும் ஒருங்கிருக்கும் ஒரு பேரவையில் அரங்கேற்றம் செய்ய ஒரு பாட்டைக் கொணரப் பெற்ற என் பேறு பெரிதே. முடத்தாமக் கண்ணியார்:-- ஐய, புலவரேறே, நும் பாட்டு முழுவதையுங் கேட்டு உள்ள முருகினேன். எத் துணை முறை கூறினும் அமையப் பெறாத அருங்கருத் துக்கள் பல நும் பாட்டில் உள்ளன. அவற்றுள் ஒன் றிரண்டை இரண்டா முறை கேட்க விரும்புகிறேன். புகார் நகரத்துக் கடற்றுறைக் கருகில் உள்ள பண்ட