பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

________________

122 சாலையைப்பற்றி நீவிர் கூறிய கருத்துக்களைக் கேட்க விழைகின்றேன். | உருத்திரங் கண்ண னார் :-- மேகமானது கடலில் முகந்த நீரை மலையிலே பொழியவும், மலையிலே வீழ்ந்த நீர் யாறாகப் பெருகிக் கடலையடையவும் அடைந்த மழைக் காலம்போலக் கடற்கரையிலேயுள்ள காவல் மிக்க பண்ட சாலையின்கண் எல்லையில்லாமல் மூட்டைகள் வந்து நிறைந்து கடலிலே கலங்களில் ஏற்றவும் கடலிலே மரக் கலங்களில் வந்து நிற்கும் பண்டங்களைக் கரையில் ஏற்ற வும் வேண்டி அறிவும் அனுபவமும் படைத்த பலர் நின்று இவ்விரு வகைப் பண்டங்களையும் அளந்து சுங் கம் முதலியன விதித்துத் தம் கடமைபை ஆற்றுவர். ஏற்றுமதியாகக் கடலில் இறங்கும் பண்டங்கள் அளந்து புலிப்பொறி பொறித்து நிறுத்து அனுப்பப்படும். அவ் வண்ணமே இறக்குமதியாக வரும் பண்டங்கள் கண் ணளவால் அளந்து சுங்கம் விதித்துப் புலி பொறித்துக் கரையில் ஏற்றப்படும். மலையிற் பொழிதல் இறக்கு மதிக்கும், கடலிற் கலத்தல் ஏற்று மதிக்கும் உவமான மாகக் கூறப்பட்டன. முடத்தாமக் கண்ணியார் :- இக்கருத்து நம் நக ரத்தின் வியாபாரப் பெருக்கத்தை உள்ளவாறு! தெரி விக்கிறது. கருங்குழலாதனார் :- ஐய, நம் மூர்க் கடை வீதி யைப்பற்றி நீவிர் கூறிய கருத்துக்களைக் கேட்க விரும்பு கிறேன். உருத்திரங் கண்ண னார் :- கடல் வழியே மரக்கலத் தால் வந்த குதிரைகளும், நில வழியே வண்டிகளால்