பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123

________________

123 வந்த மிளகு மூட்டைகளும், மேரு மலையிற் பிறந்த மாணிக்கமும், சாம்பூந்தம் என்னும் பொன்னும், பொதிய மலையிலே பிறந்த சந்தனமும் அகிலும், தென் றிசைக் கடலிற் பிறந்த முத்தும், கீழ்த்திசைக் கடலிற் பிறந்த பவளமும், கங்கை யாற்று வெளிகளில் உண்" டாகும் பொருள்களும், காவிரியா லுண்டாகிய பொருள் களும், சிங்கள நாட்டிலிருந்து வந்த பொருள்களும் கடார நாட்டிலிருந்து வந்த பொருள்களும், சீனம் முத லிய நாடுகளிலிருந்து வந்த கருப்பூரம் பனிநீர் குங்குமம் முதலியனவும், நிலம் நெளிய வந்து நிறைந்து வியாபாரம் ஆகும் கடை வீதி யென்று கூறினேன். கருங்குழலாதனார் :- நம் நாட்டு வணிகரது இயல் பைக் கூறும் பகுதி நன்கமைந்துளது. அதனைச் சுருக்கி யுரைக்க வேண்டுகிறேன். உருத்திரங் கண்ண னார்: --- வணிகராவார், தேவரை வழிபட்டும், யாகங்கள் செய்தும், ...சுக்களையும் எருது களையும் பாதுகாத்தும், நான்மறை போதிய அந்தணர் புகழை வளர்த்தும், புண்ணியம் பண்ணியும், தானங் கள் செய்தும், வருவார்க் கெல்லாம் அன்னமிட்டும், இல் வாழ்க்கையிற் குறைவற வாழ்ந்து வருவர். அவ் வணிகர்கள் உழவர் நுகத்துப் பகலாணி போன்று நடுவு நிலை தவறாது, தம்முடைய பண்டங்களையும் பிறருடைய பொருள்களையும் ஒரு - நிகராய் மதித்துக்கொண்டு மிகுதியாகக் கொள்ளாமற் கொடுத்துக் குறைவாகக் கொடாமல் பழிக்கு அஞ்சி மெய் பேசி, இலாபத்தை வெளிப்படையாகச்சொல்லி வியாபாரம் செய்வார் என்று கூறியுள்ளேன்.