பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

________________

124 முடத்தாமக் கண்ணியார்:-- நந்தம் அரசர் பிரதா பத்தைக் கூறும் அடிகள் நயம்பட அமைந்துள. அவற் றைக் கேட்க விரும்புகிறேன். . உருத்திரங் கண்ண னார் :“மலையகழ்க் குவனே கடல்தூர்க் குவனே வான்வீழ்க் குவனே வளிமாற் றுவனென " எனவும், ஒளியர் பணிந்து ஒடுங்கவும் அறிவாளர் பணி கேட்பவும் வடவர் வாடவும் குடவர் கூம்பவும் போரின் சிறப்பாற் செய்வித்துப் பொதுவரை அழித்துப் பாண்டி யனை வென்று, இருங்கோவேள் மரபை அழித்துக் காடழித்து நாடாக்கி, அரண்மனையும் நகரங்களும் அமைத்து வாழும் அரசு என்று நம் அரசர் பிரதா பத்தைக் கூறியுளேன். வளவன்:- ஐய, புலவர் பெருமானே, நும் பாட் டின் நடையும் அதன் சொற் செறிவும் பொருட் பொலி - வும் அணி நயங்களும் எத்துணை முறைதான் கேட்கினும் அமையாத சுவையும் எடுத்துரைத்தல் எவர்க்கும் எளி தன்று. ஓர் அடிக்கு நூறாயிரம் பொள் பரிசில் தருவ தாயினும் பற்றாது என்றே கூறுவேம். ஆயினும், எம் மனத்தின்கண் உண்டாகிய மகிழ்ச்சியை ஒருவாறு வெளியிடும் பொருட்டுப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசிலாய் அளிக்கின்றேம். பெற்றுக்கொண்டு ஆசி கூற வேண்டுவோம். உருத்திரங் கண்ண னார்:- அரசர் பெருந்தகையே, நும் முன்னையோருள் தமிழருமை யறிந்தார் பலர் இருந் தனர். எதிர் காலத்திலும் பலர் இருக்கலாம். ஆனால், நும்மைப்போன்று தகுதியறிந்து பரிசில் தரத்தக்க சிறப்