125
________________
125 பும் பெருமையும் படைத்தோரும் படைப்போரும் பலர் இரார் என்றே கூறுவேன். தெய்வச் செயலாற் பெரிய தோர் அரசுரிமையை அடைந்து, எத்தகையார்க்கும் நலம்புரிந்து அரசாண்டு வருகின்ற நுமக்கு நும் மரபினர் எவர்க்கும் இல்லாத ஒரு பெருமை விளையும். இனி எதிர் காலத்திலே தமிழ் மன்னர் வரலாறுகளைக் கூறுவா ரெல் லாம் சோழர் குடியைப் பெரிதாகப் புகழ்ந்து கூறுவ தோடு அம்மரபில் நுமக்கொப்பான அரசர் எவரும் இல்லை என்றே துணிந்துரைப்பர். ஆரிய நாடனைத்தை யும் வென்று அடிப்படுத்தியிருக்கும் நும் புகழ் தமிழகத் தெல்லையின் அடங்காமற் பாரத பூமி முழுவதும் பரவி வருவதை அறிவேன். வட நாட்டவர் சிலர் நும்மைப் பற்றிப் பாடும் தம்மொழிப் பாடல்களிலே நும் பெயர்ப் பொருளை அறியாது தம் மொழிப் போக்குக்கு ஏற்பப் புதுப்பொருள் கற்பிப்பதையும் அறிவேன். அதுவும் ஒரு வாறு பொருத்தமாகவே யிருக்கிறது. பகைவர்களின் படைகளில் உள்ள கரிகளுக்குக் காலனாய் இருத்தலாற் கரிகாலன் என்றும், கலிப்பகையாய் இருத்தலாற் கலி காலன் என்றும் அமைத்து அவர்கள் புகழ்கின்றனர். அவர் எம்மொழியில் எவ்வண்ணம் புகழினும், ஏற்றற் குரிய இயல்பான ' பெருமையோடு விளங்கும் நுமது பெயர் உண்மையும் உலகமும் உயிர்த் தொகைத் தொடர்ச்சியும் உள்ளவளவும் உலகின்கண் நின்று நிலைப்பதாக. நும் மாபின் பெருமை வளர்க்கப்பிறந்த மக் கள் கல்வியும் கல்விப் பயனும் அறிவினர் சேர்க்கையும் பெற்று உலகம் புகழ வாழ்வாராக. அரசரே, இனி யான் விடை பெற்றுக்கொள்ளலாம் அன்றோ?