உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

xii மேகலையில் வடிவேற் கிள்ளி, வென்வேற் கிள்ளி, நெடு முடிக்கிள்ளி, கிள்ளி வளவன் என்ற பல பெயர்களோடு ஓர் அரசன் வழங்கப்படுகின்றான். இவன் மைந்தனே உதய குமரன் என்பான். கிள்ளி வளவன் சரித்திரத்தை ஆராய்ச்சி முறையால் தமிழகத்துக்கு எழுதியுதவியிருக் கும் திருவாரூர் இலக்கணவிளக்கம் வைத்தியநாத தேசி கர் மரபினராகிய சோமசுந்தர தேசிகர், "பழந்தமிழ்ப் பெரு 'மக்கள் என்ற தம் உரை நூலிலே சோழன் குளமுற்றத் துத் துஞ்சிய கிள்ளி வளவனே உதய குமரன் தந்தை யாகிய மணிமேகலைக்காவிய மன்னன் என்று அறுதியிட் டுளர். காலவாராய்ச்சியிலே துறை போகிய இன்னவர் கருதிய கருத்து ஆதரிக்கத் தக்கதே யென்று கொண்டு இந்நூற்றொகையிலே அவ்வண்ணம் மணிமேகலையில் வரும் செய்திகளையும் புறநானூற்றில் வரும் செய்தி களையும் கலந்து, புனைந்துரை வகையால் வேண்டு வன சேர்த்து எழுதப்பட்டது. சிலப்பதிகாரத்திலே இவன் சேரன் செங்குட்டுவனுக்கு உறவினனாக அறியப் படுகிறான். அகநானூற்றிலே ஒரு கிள்ளி வளவன் கூடல் நகரிலே பழையன் மாறனைப் போரிற் சாய்த்தது கொண்டு கோதை மார்பன் மகிழ்ந்தான் என்ற செய்தி வருகின்றது. பொய்கையாராற் புகழ்ந்து பாடப்பெற்ற 'சேரமான் கோக்கோதை மார்பன் என்பான் இக்கோதை மார்பனுக்கு என்ன உறவின் முறையானோ வென்பது அறியக்கூடவில்லை. கிள்ளி வளவன் செங்கோற் சிறப்பும் அரசியற் பெருமையும் போர்த்திறமும் எங்கும் புகழ்ந்து பேசப்படுவதால், அவை விளங்க வேண்டியே இவ்வர லாறுகள் எல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டன.