பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

xiii இளைஞர்க்கென்று கதை யுருவமாக எழுதப்பட்ட உரை நடை நூற்றொகையின் முகவுரையிலே இத்துணை யும் கூறுவது, தமிழ் வளர்ச்சியில் நாட்ட முடையார் பலர் நூதன முறையில் ஆராய்ச்சி செய்து தமிழ்த்திருப் பணி புரியும் இந்நாளிலே அத்தகையார் கையில் இவை அகப்படுமாயின், உண்மை விளங்க வேண்டும் என்பது கருதியேயாம். தமிழ் நாட்டுப் பண்டை வரலாறுகளையும் நாகரிகச் சிறப்பையும் அறிய முயல்வோர்க்கு அக்காலத்தில் மக் கள் வாழ்ந்த நிலையை நூல்களால் அறிந்தவாறே கூறு வது நன்றெனத் தோன்றும். அம்முறை கருதியே புல வர், பாணர், வயிரியர், விறலியர் முதலியோர் செய்தி கள் கூறப்பட்டுள். பாணாற்றுப்படையின் கருத்து ஒரு வாறு திரித்துப் பாணன் ஒருவனை இடையிலே சேர்த்து இந்நாளைச் சிறார்க்கு விளங்குமாறு புதுமையின் அமைக் கப்பட்டுளது. இவ்வாறு வரும் புதுமைப் புனைந்துரைக ளெல்லாம் அறிஞர்க்கு வெறுப்பளியாவென்பது எதிர் பார்க்கப்படும். இளம்பருவத்திலே தந்தையை யிழந்து கலைப்பயிற் சிக்கு வழியின்றி மயங்கிய சிறியேனை மதுரைத் தமிழ்ச் சங்கக் கலாசாலையிலே ஒரு மாணவனாகச் சேர்த்துக் கொண்டு உதவி புரிந்த தமிழ் வள்ளல் பொ. பாண்டித் துரைத் தேவர் என்ற நல்லோர் பெயரை நினைந்துருகா திருக்க இயலாது. அன்னார் உதவியின்றாயின், தமிழ் எங்கே? சிறியே னெங்கே? தமிழ்ச் சங்கக் கலாசாலையில் கல்வி பயிற்றித் தமிழ்ச் செல்வத்தை யான் அடையுமாறு உதவிய தமிழாசிரியர்களாகிய ஸ்ரீ. சு. ஹரிஹரைய