உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127

________________

XI பின்னும் பத்தாண்டுகள் சென்றன. ஆண் மக்கள் இரு வரும் தமக்கு உவப்பான அரசர் குடிகளிலே மணம் புரிந்துகொண்டனர். பெண் மகள், ஆதி மந்தி முன்பு வாழ்க்கைப்பட்ட சேரர் மரபிலே மற்றொரு கிளையில் இளையான் ஒருவனை மணந்துகொண்டனள். இவர்கள் தத்தம் நாடுகளில் வாழ்ந்து வந்தனர். ஆண் மக்கள் இருவரும் பாரத பூமி முழுவதும் சுற்றிப் பார்த்து நாடாட்சியில் வேண்டிய சீர்திருத்தங்களைச் செய்து வந்தனர். திருமாவளவனும் முதுமைப் பருவம் அடைந் தான்; அற நூல்களையும் அருள் நூல்களையும் ஆராய்ந்து அறிஞரோடு அளவளாவுதலே பொழுது போக்காகக் கொண்டிருந்தான். இவ்வாறு வாழ்ந்து வருகையில் ஒரு நாள் அரச புரோகிதரும் அந்தணர் சிலரும் அரண் மனை யடைந்தனர். கரிகாலன் அவர்களை இன்முகத் தோடு வரவேற்று உபசரித்தான். பின்பு அவரனைவரும் தாம் வந்ததன் காரணத்தை வெளியிடத் தொடங்கினர். புரோகி தர்:- அரசர் பிரானே, இவ்வந்தணர் அனை வரும் நும் அரசாட்சியின் நலத்தால் இந்நாட்டில் மன மகிழ்ச்சியோடு வாழ்ந்து, அரிய பல நூல்களை ஆராய்ந் தறிந்து, உலகினர்க்குதவும் புண்ணிய சீலம் படைத்தவர் கள்; நும்மிடம் நெடுநாளாகத் தெரிவிக்கக் கருதிய