பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

________________

  • 128

தொரு செய்தியைக் கூறுமாறு இன்று இங்கு அடைந் திருக்கின்றனர். வளவன் :- அந்தணப் பெரியீர்காள், நீவிர் நம்மி டம் தெரிவிக்க விரும்புவது யாதோ? இறைவன் திரு வருள் துணையாகக் கொண்டு எம்மால் இயற்றப்பட வேண்டுவது ஏதேனும் இருப்பின், தெரிவிக்க வேண்டு கிறோம். அந்தணருள் முதியவர் ஒருவர் அங்கு வந்த வர் அனைவர்க்கும் பிரதிநிதியாகப் பேசத் தொடங்கி, முதற்கண் அரசனை ஆசீர்வதித்தார். பிறகு, மஹா மண்டலேசுவரரும் சக்கரவர்த்தியுமாயிருக்கின்ற சூரிய வம்ச திலகமாகிய சோழ மஹாராஜா அவர்களிடம் நாங்கள் தெரிவிக்க விரும்புவது ஒரே விஷயம் : அதுவும் தேசத்தின் க்ஷேமத்தைக் கருதுவதேயாம். 'மன்னன் எப்படி மன்னுயிர் அப்படி' என்பது உலக வாக்கியம். நம்முன்னோர்கள் நம்மீது கொண்டருளிய அபாரகருணை யால் நமக்கென வைத்துச் சென்ற புதையல்கள் வேத சாஸ்திரங்களாம். வேதமோ, அளவற்றது; கால வரம் பற்றது. சாஸ்திரங்கள் பல வகையாம். ஒவ்வொரு சாஸ்திரத்தின் ஓர் அமிசத்தில் ஒருவன் பூர்ண ப்ரவீணதை அடையவேண்டுமென்றால் அவ்ன் ஆயுட் காலம் முழுதும் அப்பியசிக்க வேண்டியிருக்கிறது. தமிழி லும் அப்படியே பல சாஸ்திரங்களும் செய்யுட்களும் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் முன்னோர் சென்ற முறை பற்றிப் பயின்று வருமாறு கலாசாலைகள் எல்லாம் நிறுவியிருக்கிறீர்கள். அநேகர் விசேஷ ஞானம் சம்பாதித்தவர்களா யிருக்கிறார்கள். வேத சாஸ்திரங்