பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

________________

130 வளவன் :- அந்தணப் பெரியீர்காள், எமக்கும் நெடு நாளாக இவ்வெண்ணெம் இருந்ததுண்டு. நுங்கள் கருத்தை அறிய வேண்டும் என்றே பொறுத்திருந்தோம்; இனி விரைவிலே தொடங்குவோம். புரோகிதர் வேண்டு வன செய்வார். நீங்களும் உதவியாயிருந்து நிறைவேற்றி வைக்க வேண்டுகிறோம். பிறகு அந்தணரனைவரும் விடைபெற்றுச் சென்று புரோகிதர் உதவியால் யாக சாலைக்கு இடம் ஒன்று தீர் மானித்து, யாகத்துக்கு வேண்டிய பொருள்கள் எல் லாம் சேகரிப்பாராயினர். நன்னாள் ஒன்றிலே உத்தம "லக்ஷணங்கள் அமைந்த குதிரை யொன்று நிலமெலாஞ் சுற்றி வருமாறு அனுப்பப் பெற்றது. அதைப் பின் றொடர்ந்து அரசகுமாரரும் வீரர் பல்லாயிரவரும் சென் றனர். அப்பரிமா சென்ற இடங்களிலெல்லாம் சிறப்புச் செய்யப்பெற்று விரைவில் மீண்டு வந்தது. பிறகு அதைக் கொண்டு அந்தணர் பலர் உதவியாற் கரிகாலன் தன் கோப்பெருந்தேவியோடு யாக சாலையில் அமர்ந்திருந்து, அசுவமேத யாகம் இயற்றினான்; காவிரியில் அவப்பிரத ஸ்நானம் செய்தான்; அந்தணர் பலர்க்கும் புலவர் பலர்க் கும் செம்பொன் வழங்கினான். பிறகு அரண்மனை புகுந் தான். அதன் பின்பு சில வருடங்கள் கரிகாலன் அரசப் பொறை தாங்கியிருந்தான். அயல்நாட்டு அரசர் பலரும் முறைப்படி திறை யளந்துகொண்டிருந்தனர். ஒருமுறை அவரனைவரும் பூம்புகார் நகருக்கு வந்து, அரசர் பெரு மானைக் கண்டு கொள்ள வேண்டும் என்ற ஆணை பிறப் பிக்கப்பட்டது. குறித்ததினத்திலே அவரனைவரும்வந்து