பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131

________________

131 தம் அரசர்க் கரசைக் கண்டு வணங்கித் தாம் செய்தற் குரிய சிறப்புக்கள் செய்து, சில நாள் வாழ்ந்திருந்தனர். அவரனைவரும் நகரத்தில் இருக்குங்காலத்தே தன்மூத்த மகனாகிய கோக் கிள்ளிக்கு இளவரசுப்பட்டம் சூட்டித் தான் அரசப் பொறையிலிருந்து சிறிது சிறிதாக விலகிக் கொள்ளக் கருதியிருப்பதைக் கரிகாலன் தெரிவித்தான். அமைச்சரும் அந்தணரும் புலவரும் அரசரும் அதனை மனமின்றி யேற்றுக்கொண்டனர். அரசரெல்லாம் உரிய காலத்தில் விடை பெற்றுத் தத்தம் நாடுகட்குச் சென் றனர். கரிகாலன் அதன்பிறகு அருள் நூல்களை ஆராய்ந்து, நல்லோர்களோடு அளவளாவிப் பொழுது போக்கிக் கொண்டிருந்தான். ஒருநாள், சில புலவர்களுடன் தெய்வ விஷயமான சம்பாஷணை செய்துகொண்டிருந்தான். அந் தணர் பலரும் பிற அறிஞரும் அங்கிருந்தனர். பின் வரும் பேச்சு நிகழ்ந்தது: வளவன்:-அறிஞர்களே, இத்துணையாண்டுகளாக நாம் நாட்டின் நலங் கருதியே உழைத்து வந்திருக் கிறோம். உண்மைப் பொருளை யுணர்த்தும் நூல்கள் நம் நாட்டிற் பல திறப்பட்டிருத்தலால், அவற்றையெல்லாம் ஆராய்ந்தோம்; அறிந்தோர்களோடு அளவளாவினோம்; பல புண்ணிய தலங்களுக்குச் சென்றோம்; இறைவனைத் தொழுது வணங்கி வாழ்த்தினோம்; வேத சாஸ்திரங் களிற் சொல்லிய நற்கருமங்களில் எமக்கு விதித்தவற்றை யெல்லாம் செய்தோம். இருப்பினும், எம்முள்ளம் அமைதி பெறவில்லையே! இதற்குக் காரணமும் எம்மால் அறிய இயலவில்லை.