பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

________________

132 அறிஞர் ஒருவர்:- அரசர் பெருமானே, மக்களாய்ப் பிறந்தார் செய்தற்குரியவெல்லாம் செய்தும், நும் மனம் அமைதி பெறாமைக்குக் காரணம் ஒன்றே; யான் எனது என்ற பற்றுக்கள் இரண்டும் நும்மைப்பற்றி விடவில்லை. 'யான் எனது என்னும் பிணக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த வுலகம் புகும்,' என்று பெரியார் கூறுவர். எல்லாமாய் அல்லவுமாய் இருந்த இறைவனை ஏதேனும் ஒரு பயன் கருதி வணங்கி வாழ்த்தும் இயல்பே மக்க ளிடம் பொதுவாய் உளது. ஒரு பயனும் எதிர் பாரா மலே வணங்கி வாழ்த்தி அப்பணியே பயனாகக் கொள் ளும் மன நிலை ஒருவர்க்கு வருமாயின், அவரே மன வமைதி பெற வல்லார் ஆவர். காணப்படும் பொருள் களிலேயுள்ள ஆசை அடியோடு அற்றாலன்றிக் காணற் குரிய அரும்பொருளைக் காண்டல் இயலாது. உள்ளத்தை அவனுக்குக் கோயிலென்றாக்கக் கருதின், முன்னே அங் கடைந்திருந்த அழுக்குக்களை யெல்லாம் ஒட்ட வேண் டும். மனவமைதி பெற்று மனித வாழ்வின் பயனைப் பெறுதற்கு நம் பெரியோர் கண்ட வழி இதுவேயாம். வளவன்:-'இன்ன தன்மைத்து; இன்ன உருவ முடைத்து; இன்ன ஆற்றலுடைத்து; இதுதான் பொ ருள்,' என்று காட்டவல்லார் எவரையும் யாம் இந்நாள் வரையிற் கண்டிலேம். காட்ட வல்லார் உளராயின், அவர் நம் கண்ணிற் படாமற் கடவுட் பயன் தாமே துய்த்து மறைந்திருப்பார் போலும்! அந்தணர் ஒருவர்:- வேதங்களால் தெளித்துக் கூறப்பட்ட பொருளை ஆராய்ந்தறிந்தார் பலருளர். அறி கின்றாரும் உளர். அறிவாரும் உளராகலாம். இன்னது