பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133

________________

133 கண்டேம் என்று உண்மையிற் கண்டாராலும் விள்ளப் படாத பெருமையுடைய அப்பொருளைக் காட்ட வல் லார் உளராதல் அருமையே. தாம் தாம் துய்க்கும் இன் பச் சுவையைத் தாமே கண்டு ஆனந்திக்கலாகுமேயன்றிப் பிறர்க்குக் காட்டலும் கூடுமோ? காட்ட வல்லாரா யிருப்பார் சாமானியமான மக்கட் பிறப்பினரோடு ஒப் 'பாகக் கருதத் தக்கவராகார். அவரை மக்களினத்தினும் தேவரினத்தினும் மேம்பட்டார் என்றே கூறல்வேண்டும். அத்தகையார் இறைவன் அருளொளியின் துளியாய் அநேக ஆயிர ஆண்டுகள் இடைப்பட உலகத்திலே தோன்றித் தம் அரும்பணியை நிறைவேற்றுவர். அவ ரைக் காண்டல் எவர்க்கும் எளிதில் இயலாது. அதற் குரிய நல்வினை செய்தார்க்கே அப்பேறு பெற வுரியதாம். வளவன்:- நீவிர் கூறுவனவெல்லாம் எமக்கும் உண்மை யென்றே தோன்றுகின்றன. ஆயினும், உள்ள முற வுய்த்துணர்ந்து கடைப்பிடிக்கத் தக்க மனவூற்றம் இல்லாமை பொன்றே எம்மிடம் உள்ள குறையாம். அவனை யறிதலும் அவனருளாலே அமைவதன்றோ ? அவனருள் கொண்டே அவன் தாள் வணங்குவேம்; வரும் பயனைப் பெறுவேம். தமிழ்ப் புலவர் ஒருவர்:--அரசர் பிரானே, அவனரு ளாலே அவன்றாள் வணங்குவது என்பது நம் நாட்டுப் பெரியார் அருளிச்செய்த அருள் நூல்களின் கருத்தாம். ஆணல்லன் பெண்ணல்லன் அலியல்லன் என நூல்க ளால் வரையறுக்கப்பட்ட கருணை வள்ளல், உருவம் - உடையனோ இலனோயாம் அறியோம். ஆயினும், அருளே உருவமாயுடையான் எனவும், அன்பினால் உருகியடை