பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

________________

134 வார்க்கு அணியனாய் எளிதிற் பெற்லாம் பொருளாய் இருக்கின்றான் எனவும் அறிவோம். பல நூல்களையும் கற்று அவற்றின் பொருளை உற்றுணர்ந்து, மனமுருகிக் கதறி விளிப்பார்க்கே இறைவன் அருள் புரிவான் என்று எண்ண வேண்டா. சிற்றெறும்பின் சிற்றொலியும் செவிக் கொண்டு அதற்கு வேண்டியவாறு அருள் புரியும் அம லன், உண்மையான அன்போடு நினைவார்க்கு மிகவும் நெருங்கிய - உறவினனாகவே இருப்பன். அன்னை யென்றும் தந்தை யென்றும் நாம் உலகத்தே அறிந்த நெருங்கிய உறவினர் - நம் கண் முன்னே மாண்டு மண் ணாகக் கண்டோம். இவ்வுலகிற்கெல்லாம் உயிர்கட் கெல்லாம் அம்மையப்பனாகி என்றும் அழியா தவனாகி யிருக்கும் அவனே மனித வருக்கத்தார்க்கு உரிய உற வாய் என்றும் முன்னிற்கக் காண்போம். அறிதல் அரி தாயினும் எளிதே. அவன் அருளின் திறத்தை யாரே அளவிட வல்லார்! வளவன் :--நீவிர் பேசும் பேச்சுக்களெல்லாம் எம் உள்ளத்தை உருக்குகின்றன. செறிவிற் செறிந்த செறிவாகித் தெளிவிற் றெளிந்த தெளிவாகி அறிவிற் புகுந்த வறிவாகி யருளிற் கிளரும் அருளாகிப் பிறிவிற் பிறிந்த பலவாகிப் பிறியா வொன்றாய்ப் பிறங்குகின்ற குறியிற் கிடந்து மயங்காதே குறைகள் பெருகிக் குலைந்தேனே.