பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

________________

136. ன்ற கருங்குழலாதனார் என்ற புலவர், 'த மடைந்த காட்சியைக் கண்டார்; மன . "திருமாவளவன் என்ற செஞ்ஞாயிறு தா, புலவருலகத்தை இருள் சூழ்ந்தது. வீரருள் பக் காண்பேமா என்று நெடு நாளாக எதிர் பார்த் ருந்த விண்ணவர் வென்றனர். மண்ணவர் தோற்ற னர். பாரத தேயத்தில் உள்ள பல நாட்டு மன்னரும் தம் ஏகாதிபதியாகிய தலைவனை யிழந்தனர். அமர் பல கடந்த தும், அரண் பல அடைந்ததும், புலவரைப் புரந்ததும், பாணரை வாழ்வித்ததும், அற நெறி யறிந்த பெண்டிரோ டிருந்து வேத வேள்விகள் முடித்ததும் ஆகிய அம்மன் னன் செயல்களைப் பற்றி யாரே புகழ வல்லாராவர்? உலக மன்னவன் என்ற பொருளொடு பொருந்திய பட்டப் பெயர் பூண்ட அம்மன்னன் இன்று யாங்கு ஒளித்தான்? . இவ்வுலகம் அப்பெருஞ்செல்வத்தை இழந்ததால், இரங்கத் தக்கதே! வேனிற்காலத்தே தம் ஆடுகளுக்குப் பச்சிலையுணவு கொடுக்குமாறு கோவலர்கள் பூவும் இலை யும் உதிரக் கொய்து அழித்த வேங்கை மரம்போல அம் மன்னர் பிரான் அன்புக்குரிய மகளிரும் தம் பொன்னணி களைக் களைந்தனர். இத்தகைய காட்சியைக் காணவும் எனக்கு அமைந்திருந்ததே!" என்று கூறிப் புலம்பினார்; கையறு நிலை பாடினார். அறிஞர் பலர் திரண்டு கோக் கிள்ளி என்ற மூத்த மகனுக்கு முடி சூட்டினர்; இளைய மகனைக் கொண்டு, தந்தைக்குரிய கடன்களை யெல்லாம் ஆற்றுவித்தனர். சோழ நாடெங்கும் முதற்கண் இச்செய்தி பரவியது; பின்பு தமிழக முழுவதும் பாரத தேச முழுவதும் பரவி யது. அதனாற் பல நாட்டரசரும் புதிய வரசனது மகுடா பிஷேகத் திருவிழாவைக் காணற்பொருட்டு வந்தனர்