பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

________________

காலத்திற் சிறந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. பிற்காலத்துச் சோழ அரசர்கள் தத்தம் பெயராற் பல நகரங்கள் நிருமித்தனர். அவை யெல்லாம் இப்பொ ழுது பெயரளவில் நிற்கின்றன. பண்டைத் தமிழ் மன்னர் என்று தமிழர் கருதும் சேர சோழ பாண்டியருள், இந்நாளிலே திருவாங்கூர் மன்னர் சேர மன்னர் பரம்பரையினர் என்று கருதப் படுவர். அவர் தமிழ் மன்னராக இக்காலத்தில் இல்லா திருப்பது உலக மறிந்ததே. சோழ மன்னர் குடியும் பாண்டிய மன்னர் குடியும் புகுந்து மறைந்த இடமே தெரியவில்லை. தமிழ் மன்னரது பண்டைப் புகழின் பகுதியில் ஒரு சிறிதேனும் நாம் அறியத் தக்கவாறு இந் நாளிலே அம்மரபினர் எவரும் இல்லாது போனது அறிஞர் அறிந்து விசனித்தற்குரியதே. இம்மன்னர்கள் நிலை இவ்வாறு ஆயதுபோல இவர்கள் ஆண்ட நாடு நகரங்களின் நிலையும் ஆயிருப்பது அறிந்து வருந்தத் தக்கது. முன்னாளிலே பெரிய நகரங்களாய் மிக்க செல்வ நலம் படைத்திருந்த உறையூரும் புகார் நகரமும் இந் நாளிலே மிகச் சிறிய வூர்களாக மாறித் தம் பண்டைப் பெருமையை விளக்கும் விருப்பமும் வலிமையும் அற் றனவாய் இருக்கின்றன. அரசர்க்கு வரும் வாழ்வு தாழ்வுகள் அவர்தம் நகரங்களுக்கும் வரும் எனச் சோழ் மன்னர் வரலாற்றிலிருந்தே நாம் அறியலாம். இவை இந்நாளில் இருக்கும் நிலைமையைக் காணும் தமிழன் ஒருவன் பண்டைத் தமிழ் நூல்களை நன்கு ஆராய்வானாயின், இவற்றின் பண்டைப் பெருமையை