பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

________________

சகாபாக யும் இந்நாளைச் சிறுமையையும் எண்ணி மனங் கசிந்து கண்ணீர் உதிராமலிரான்: பண்டைப் பெருமையை ஒரு சிறிதேனும் இந்நாண் மக்கள் அறிய வேண்டி இம் மன்னர் மரபிலே தோன்றிய பெருமக்களுள் நின்ற புகழ்படைத்த சோழன் கரிகாற் பெருவளத்தான் வரலாறு இங்கு ஒருவாறு கூறப்படும் : உறையூர்ப் பெருநகர் எண்ணிறந்த புலவரும் அறி ஞரும் வீரரும் மன்னரும் பிறரும் மகிழ்ந்து வாழ்தற் குரியதாய் இடமகன்றதாயிருந்தது. அந்நகரிலிருந்து, அறிஞர் கூறும் அறவுரை கேட்டு, அதற்கிணங்கச் சேட் சென்னி யென்ற சோழ மன்னன் சோழ நாட்டை ஆண்டு வந்தான். அவன் ஆண்மையும் போர்த் திறமும் படைத்த அரசர் பெருமானாகையால், அயலரசரெல் லாரும் அவன் பெயர் கேட்பினும் அஞ்சுவாராயினர். மன்னன் சேட்சென்னி, வளம் படைத்த சோழ நாட்டிலே புலவர் பலரும் மகிழ்ந்து வாழ்தற்காவன செய் வித்தான். அவனுக்கு இளையோனாகிய இளஞ்சேட் சென்னி யென்பான், "ஏந்தெழில் மிக்கான்; இயற் றமிழ் வல்லான் ; நயனுடை யின் சொல்லான்; விற்போர் வல்லான் ; வேற்போர் வீரன்; வாட்போர் வல்லவன், என்று நாடு போற்ற வாழ்ந்திருந்தான். அவ்விளை யோன், மூத்தோனாகிய அரசனுக்கு உதவியாகப் போர் புரிந்து, நாடு காத்தற்கு ஆவன புரிந்து வந்தான். அந் நாளிலே போர்ப்படையிற் றேர்ப்படையே பெரிதாக மதிக்கப்பட்டது. ஆகையால், அவ்விளஞ்சேட்சென்னி அழகிய பல தேர்களைச் செய்வித்து, அவற்றைப் போர்க் களங்களிலே நடத்திப் போர் புரிந்து, வெற்றி பெற்று