பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

________________

முதியவர் ஒருவர், அமைச்சர் தம் ஆதனத்தில் அமர்ந்த பிறகு எழுந்து, தம் கருத்தை வெளியிட்டார். அவரும் பெரும்பாலும் அமைச்சர் கூறிய கருத்துக் களையே கூறினர். புலவர் ஒருவர் எழுந்தார். அவர், "அரசரே, அவையகத்தீர், கண்ணில்லாத வாழ்வும், மதி யம் ஒளி செய்யாத வானகமும், அமைச்சரில்லாத அர சாட்சியும், அறிஞர் இல்லாத அவைக்களமும், மக்கள் இல்லாத மனை வாழ்வும் ஒப்பாம் என்பர் பெரியோர். பொது மக்களுக்கே மக்களில்லாக் குறை பெருந்துயரம் விளைக்கும். தம் நாட்டின் நலத்தின் பொருட்டே எல்லா வகை நலங்களையும் துய்க்கும் அரசர்க்கு மக்களில்லாக் குறை அவர் மாத்திரமேயன்றி அவரை யடுத்தார் எவ ரும் எண்ணிக் கவலத் தக்க பெருங்குறையாமன்றோ? அரசர் பிரானுக்குத் தேவியர் இருவர் இருக்கின்றனர். அத்தேவியர் கற்பின் கொழுந்தனையர்; பொற்பின் செல் வியர்; நாணின் பாவையர்; நீணில விளக்கனார். அத் தகைய நற்பெண்டிர் மகப்பேறு பெறாமை இறைவன் அருட் சிறப்பே போலும்! இளைய வேந்தர், தமக்கொத்த குலத்திலே ஒரு கற்பரசியை மணம் புரிந்திருக்கின்றார். சென்ற பல வாண்டுகளாக அவர்க்கும் மகப்பேறு இல்லை. அவர்க்கேனும் மகப்பேறு உண்டாயிருப்பின், ஒருவாறு நாட்டார் மனக் குறை தணியலாம். ஆகையால், இனி, அரசர் பிரான் இறைவன் திருவருள் பெற்று எவ்வகை யாலேனும் நம் நாட்டை ஆளத் தக்க ஓர் இளவரசனைத் தரல் வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாம், என் றியம்பி இருந்தனர். - வேறு பிறர் எழுந்து, அதுவே எம் கருத்தும், என்று கூறித் தம் இருக்கையில் அமர்ந்தனர். பின்னர்