பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

________________

ஆதனங்களில் அமர்ந்தனர். அரசன் சிங்காதனத் தமர்ந்தான். இளைய வேந்தன் அருகிலே அமர்ந்திருந் தான். அமைச்சர் பலரும் புலவருட் சிலரும் அரச னைச் சூழவிருந்த இருக்கைகளில் அமர்ந்தனர். புலவர் ஒருவர் எழுந்து, அரச வாழ்த்துக் கூறி னர். பின்னர் அமைச்சர் தலைவர் எழுந்து, மன்னர் பிரானே , இளையவரசே, அறிஞர்காள், இன்று இறை வன் திருவருளால் நாம் எண்ணிய எண்ணம் நிறை வேறுக. சோழர் குடியின் பழமையும் பெருமையும் புகழும் உலகம் அறிந்த உண்மைகளே. அத்தகைய பழம்பெருங்குடியில் இப்பொழுது அரசு பூண்டிருக்கும் - மன்னர் குண நலங்கள் நம் நாட்டு மக்கள் மனத்தை யெல்லாம் கவர்கின்றன என்பது மெய்யே. இத்தகைய நல்லரசர் ஆட்சியின்கீழ் வாழ்ந்த மக்கள் மேலும் மேலும் இன்ப வாழ்வே பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பே. தற்காலம் இறைவன் அருள் குடி மக்களது நோக்கத்துக்கு உதவியாய் இருப்பதாகக் கூறுவதற் கில்லை. எல்லாக் குணங்களும் எல்லா நலங்களும் எல் லாச் செல்வங்களும் நிரம்பிய நம் அரசர் பிரானுக்கு மக் கட்பேறில்லாதிருப்பது நம் மனத்திற்குப் பெருங்கவலை யைத் தருகின்றது. தேவிமார் இருவரும் அரசர் பெரு மானும் தெய்வத் திருவருள் பெறக் கருதிச் செய்த புண் ணியச் செயல்கள் இந்நாள்காறும் பயன் தந்தில. என்று பயன் தருமோ ! என்று நம் மனக்குறை யகலுமோ! அறியோம். இறைவன் திருவருள் விரைவில் எய்துக என்று நாம் எல்லாம் வல்ல அவனையே பணிவோம், என்று கூறி யமர்ந்தனர். -