பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

________________

11 முதியவர் ஒருவர்: - அரசரேறே, இத்தகைய உயர்ந்த பழங்குடி யொன்றிலே மன்னர் பெண் கொள் வது எமக்கெல்லாம் விருப்பமே. விரைவிலே மணம் முடிந்து இறைவன் திருவருளால் எம் நாடு ஓர் இளவர சைப் பெறவேண்டு மென்பதே எமது வேண்டுகோளாம். அரசன் :- இளையோற்கு விரைவிலே மணம் நிகழ்த்து வோம். அழுந்தூர் வேள் என்ன சொல்வாரோ! அழுந்தூர் வேள்:- மன்னர் பிரானே, யானும் எமது குடியும் எம் கல்வியும் அறிவும் பொருளும் திறமையும் வீரமும் எல்லாம் எம் அரசினர்க்கே உரிமையாயிருக்க, எம் குடியிலே பெண் கொள்வது பற்றி எனது விருப் பம் அறிய வேண்டுமோ! இளையவேந்தர் மனமுற விரும்பி எம் குடிச்செல்வமாகிய பெண்ணருங்கலத்தை யேற்றுக் கொள்வராயின், யான் கொடுக்க இசைகின்றேன். அரசன் :- இளையோய், நின் கருத்து என்ன? இளையோன் :- அறிவிலும் அனுபவத்திலும் சிறந்த பெரியோர் பலரும் கூடி நாட்டின் நலம் கருதி முடிவு செய்த வொரு விஷயத்திலே நான் மாறான கொள்கை யுடையனாயிருத்தல் இயலுமோ? அரசன் : - அங்ஙனமாயின், விரைவிலே மண வினை நிகழ்த்துவோம். நும் விருப்பமெல்லாம் நிறைவேறுக. பெரியீர்காள், இனி விடை பெறலாம். யாம் மந்திர சாலைக்குச் செல்கின்றோம்.