பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

________________

II உறையூர்ப் பெருநகர் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் மண வினையின் பொருட்டு மங்கள கரமாக அலங்காரம் செய்யப்பட்டது. அரச மாளிகை யில் மங்கள வாத்தியங்கள் முழங்கிய வண்ணம் இருந் தன. சோழ பரம்பரையார் திருமண வினையை நிகழ்த் தும் சிறப்பினைத் தனக்கென்றமையப் பெற்ற திருமண மாளிகை தேவர் உறையுள் போல விளங்கியது. அரு கிலேயுள்ள சிறியவும் பெரியவும் ஆகிய பல மாளிகை களில் வேளிர் பலரும் வேறு பல சிற்றரசரும் வந்து நிரம்பினர். அழுந்தூர் வேளும் அவர் தம் உறவினரும் ஒரு பெரிய மாளிகையில் வந்து தங்கினர். மண வினைக்குரிய மங்கல நாள் குறுகியது. அந்தணரும் அறி ஞரும் புலவரும் பிற பெரியார்களும் திருமண மாளிகை யிற் கூடினர். சேட்சென்னியும் இளஞ்சேட்சென் னியும் இரண்டு அழகிய தேர்களி லமர்ந்து, அரண்மனை யிலிருந்து மண மனை வந்தடைந்தனர். அரச பத்தினி யரும் பிற பரிவாரத்தாரும் சிவிகைகளிலும் பிற வூர்தி களிலும் வந்து அவரவர்க்கமைந்த விடங்களில் அமர்ந் தனர். திருமணவோரை நெருங்கியது. விண்ணவர் செவி களும் செவிடு பட மங்கல வாத்தியங்கள் முழங்கின. தேவரும் மக்களுட் பெரியாரும் சான்றாய் நிற்க, மண