பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

________________

13 வினைக்குரிய சடங்குகள் நிகழ்ந்தன. புலவர் பலர் புகழ்ந்து போற்ற, அழுந்தூர் வேள் தம் மகளை உரு. வப் பஃறேர் இளஞ்சேட் சென்னிக்கு மனமுவந்து கொடுத்தார். அந்தணர் பலர் ஆசி கூறினர். பேரிளம் பெண்டிர் பல்லாண்டு பாடினர். அங்கு நிறைந்திருந்த புலவர்க்கெல்லாம் அவரவர் தகுதிக்கேற்பப் பரிசில் வழங்கப்பட்டன. மண வினை நிகழ்ந்த மண்டபத்தே பலர் முன்னிலை யில் அழுந்தூர் வேள் புலமை சிறந்த தம் மைந்தராகிய இரும்பிடர்த்தலையாரைச் சோழ நாட்டின் நலத்தின் பொருட்டுப் பணி புரிகவென அரசரிடம் நண்பும் பணி யும் பூணுமாறு விட்டார். சேட்சென்னியும் இளஞ் சேட்சென்னியும் இச்செய்தியை யறிந்து, மிகவும் சந் தோஷித்தனர். பிறகு வந்திருந்தார் எல்லாரும் விருந் துண்டனர். மங்கலத் திருவிழவிலே சில தினங்கள் சென்றன. பிறகு மண வினை காண்டற்பொருட்டு வந் திருந்தோ ரெல்லாம் அரசரிடம் விடை பெற்றுத் தத் தம் ஊர்களுக்குச் சென்றனர். அழுந்தூர் வேளும் தம் மகள் பொருட்டுத் தாம் செய்தற்குரிய சிறப்பை யெல் லாம் செய்து, அரசர் அனுமதி பெற்று, மைந்தரிடமும் மகளிட்மும் அரிதின் விடை பெற்றுத் தம்மூர் நோக்கிச் சென்றார். உறையூர் நகரிலே முன்போல அரசுரிமைச் சுற்றத்தா ரெல்லாம் தத்தம் பணியை மேற்கொண்டு அற நெறி வழாது நடந்து வந்தனர். நாடெங்கும் செல்வம் வளர்ந்தது. வியாபாரமும் விவசாயமும் கைத்தொழில்களும் விருத்தியாயின. தமிழகத்தே சோழ நாட்டுக்கிணையான நாடு இல்லை