பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

________________

14 பென்று கூறத் தக்க நிலை வந்தது. மன்னனும் இளை யோனும் அரசின் நிலை உறுதிப்பட வேண்டுமென அயல் நாடுகளிலே அடிக்கடி போர் புரிந்து, நாட்டின் உருவைப் பெருக்க முயன்றனர். அரசுரிமை, சேட் சென்னி மகனில்லாது விண்ணகம் சேர்ந்தால், தமக்கு வரலாமேயென்று கருதுவோர் சிலர், தம் முயற்சிகளை மறைவாக நடத்தி வந்தனர். இளஞ்சேட் சென்னியின் வீரத்தையும் போர்த் திறத்தையுங் கண்டு அவரெல்லாம் வெளிப்படையாகத் தம் கருத்துக்களைத் தெரிவிக்கவும் வேண்டிய முயற்சிகளைச் செய்யவும் அஞ்சியிருந்தனர். புலவர் பலர் உறையூரை யடைந்து, அரசன் ஆதரவு பெற்று வாழ்ந்தனர். உருவப் பஃறே ரிளஞ்சேட் சென்னி அழுந்தூர் வேள் மகளை மணந்து இரண்டாண்டுகள் ஆயின. இறை வன் திருவருளால் அவள் வயிறு வாய்த்தனள்; உத்தம விலக்கணம் அமைந்ததொரு நன்னாளிலே நல் வேளை யிலே ஓர் ஆண் மகவை யீன்றனள். இந்நற்செய்தி கணப் பொழுதில் நாடெங்கும் பரவியது. உறையூர் நகரெங்கும் அலங்காரங்கள் செய்யப்பெற்றன. நாட்டி னர் அனைவரும் தத்தம் மனையகங்களிலே 'மங்கல விழாக்கொண்டாடினர். அரசுரிமையிலே உறவின்முறை பற்றி உரிமை கொண்டாடி மறைவான முயற்சிகள் செய்தோர் மனத்திலே பகை நெருப்பு எழுந்தது. ஒரு செய்தி சிலர்க்குத் தீதாகத் தோன்றுவது, அது பலர் நன்மைக்காக வந்ததேயாயினும், உலகத்தில் இயல்பே யன்றோ ?