பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

________________

15 நாடெங்கும் உள்ள திருக்கோயில்களிலே சிறப்புக் கள் செய்யப்பெற்றன. தகுதியுடையார் பொருட்டுத் தான தருமங்கள் செய்யப்பெற்றன. சிறையகத்திருந்தா ருட் பலர் விடுவிக்கப்பெற்றனர். நாட்டு மக்கள் இரண் டாண்டுகளுக்கு அரசிறை இறுக்க வேண்டாவென முர சறையப் பெற்றது. வறியார் பலர் அரண்மனையிலே வேண்டுமளவு பொன்னும் பொருளும் உடையும் உண வும் பெற்றனர். பாணரும் விறலியரும் பொற்பூவும் பொன்னும் பெற்றனர். புலவர் பலர் வந்து வாழ்த்திப் பரிசில் பெற்றுச் சென்றனர். நிமித்திகருட் சிறந்தார் பலர், அரண்மனை யடைந் தனர். அவர்கட்கென வமைத்ததொரு மண்டபத்தி லிருந்து அரசிளங் குமரன் ஜாதகம் கணிக்கத் தொடங் கினர். அவர்கள் அனைவரும் நெடுநேரம் நன்கு ஆலோ சித்துத் தம்முள் முதியார் ஒருவரை அரசர் திருமுன்பு அனுப்பினர். சேட்சென்னியும் இளஞ்சேட் சென்னி யும் இரும்பிடர்த் தலையாரும் ஒரு தனியறையில் அமர்ந் திருந்தனர். நிமித்திக முதியார் அங்கு வந்தடைந்தார். அவர் அரசனால் முகமலர்ச்சியோடு வரவேற்கப் பெற்றுப் பிறகு அங்கு இருந்ததோர் ஆதனத் தமர்ந்தனர். பிறகு அங்குப் பின் வருமாறு சம்பாஷணை நிகழ்ந்தது : அரசன் :- பெரியீர், நும் நூற்பயிற்சியினால் நீவிர் அறிந்தவளவு நம்செல்வன் எதிர் கால வாழ்வின் நிலையை ஒருவாறு கூறலாமே! இரும்பிடர்த் தலையார்:-- நிமித்திகப் பெரியீர், இந் நாட்டின் நலங் கருதி உதித்திருக்கும் இளஞாயிற்றின்