பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

________________

16 வருங்கால வரலாற்றிலே நீவிர் காண்பவற்றுள் ஒன்றும் ஒளியாது கூற வேண்டுகிறேன். நிமித்திகர் : - அரசர் பெருமானே, இளைய வேந் தரே, பிடர்த்தலைப் பெரியீர், என் நூற் பயிற்சியாலும் அநுபவத்தாலும் தெளிவாக அறியும் சில வுண்மைகளை இங்குக் கூறுகின்றேன் : நான் சொல்லும் செய்திகள் எல்லாம் நல்லனவாய் இருக்க வேண்டு மென்பதே என் நோக்கம். இப்பொழுது நம் நாட்டின் நலங் கருதி இறைவன் திருவருளாற் பிறந்த செல்வன் உயர்ந்த வாழ்வு பெறுவன் என்பதில் ஒரு சிறிதும் ஐயுறவில்லை. நீண்ட ஆயுளும் வெற்றித் திருவும் பெருமையும் செல்வ மும் பெறுவான் என்பதும் உண்மையே. நம் அரசினர் குடியிலே இவனுக்கு முன்னும் பின்னும் இத்தகைய புகழ் படைத்தாரும் படைப்பாரும் இலர் என்று எவ ரும் கூறலாம். படி புகழ் பெற்று வாழ்வான் என்பது ஒளி நூலார் கருத்தாம். கல்வி அறிவு ஆண்மை அழகு வீரம் திறமை யெல்லாம் . இவனை யடைந்து அழகு பெறும். இந்த அரச மரபே, இச்செல்வன் பிறந்ததால், மிக்க சிறப்படையும். உலக வாழ்வு முழுவதும் இன்ப மயமாகவே இருப்பதில்லை யென்பதை நீவிர் அறிவீர். இளம்பருவத்திலே இவ்வரசிளஞ் சிங்கம் சிறிதளவு துன்பம் அடைவான். சிறைக்களத்தே சில நாள் இவன் வாழவும் நேரிடும் என்று தோன்றுகிறது. பிறகு நெருங் கிய உறவினர் ஒருவர் உதவியாலே மறைந்து வாழ்ந் திருந்து, இறைவன் திருவருளால் அரசுரிமை பெற்றுப் பின்னர்ப் பகைவரை யெல்லாம் அடக்கி வாழ்வன் என்று கூற வேண்டும். உலகிற் பிறந்தார் எவரும் துன்